குறைப்பிரசவத்தால் கூடுது பிரச்னை!! (மருத்துவம்)
குறை மாதத்தில் பிறப்பவர்கள் வளர்ச்சி குறைந்தவர்களாக இருப்பார்கள் என்பது ஏற்கனவே நிரூபணமான உண்மை. இப்போது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் மூளையின் இணைப்புகள் (Brain network) பலவீனமாக இருப்பதால் கவனக்குறைவு மற்றும் கற்றல் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் மனநல மருத்துவத்துறை பேராசிரியரான டாக்டர் சிந்தியா ரோஜர்ஸ் தன் குழுவினருடன் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவு இது.
‘‘இந்த குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு மூலகாரணம் குறைப்பிரசவமே. மூளை வளர்ச்சிக் குறைவினால் ஏற்படும் ஆட்டிசம் (Autism), கவனம் மற்றும் அதிஇயக்க சீர்கேடு (ADHD) போன்ற மனநல குறைபாடுகளுக்கும், பதற்றம் (Anxiety), மனஅழுத்தம் (Stress) போன்ற உளவியல் பிரச்னைகளுக்கும் குறைப்பிரசவமே காரணமாகிறது’’ என்கிறார் சிந்தியா.
இவரது குழுவினர் முழுமையான பிரசவத்தில் பிறந்த 58 குழந்தைகளையும், பிரசவ தேதிக்கு 10 வாரங்களுக்கு முன்பாகவே பிறந்த 76 குறைப்பிரசவ குழந்தைகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, அவர்களின் மூளை செயல்பாடுகளை FMRI (Functional Magnetic Resonance Imaging) ஸ்கேன் செய்து சோதித்தனர்.
இதில் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளிடத்தில் தகவல் தொடர்பு, கவனம் மற்றும் உணர்ச்சிகளின் செயல்பாடுகளுக்கு காரணமான மூளையின் இணைப்புகள் பலவீனமாக இருப்பதும், மூளையின் நெட்வொர்க்கில் முக்கியப் பங்காற்றும் வெள்ளை நாளங்களும், அதில் உள்ள நரம்பிழைகளும் இயல்புக்கு மாறாக இருந்ததும் தெரியவந்தது.
இத்தகைய அசாதாரண மூளை இணைப்புகளே வளரும் நிலையில் அவர்களுக்கு ஏற்படும் நரம்பு, மூளை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு காரணம் ஆகின்றன. இதோடு வளரும் நிலையில் கவனக்குறைவும் கற்றலில் குறைபாடும், கேட்கும் திறன் இழத்தல், மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் பார்வைக் கோளாறுகளும் ஏற்படலாம்.
‘‘5 முதல் 10 வயது நிரம்பிய குறைமாதக் குழந்தைகளிடத்திலும் சோதனை மேற்கொண்டிருக்கிறோம். இவர்களின் மூளை நரம்புகளின் செயல்பாடுகளில் ஏதாவது முன்னேற்றம் செய்ய முடியுமா என்கிற ரீதியிலும் ஆராய்ச்சியைத் தொடர்கிறோம். ஆரம்ப நிலையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளால் பின்னாளில் இக்குழந்தைகளுக்கு வரக்கூடிய நரம்பியல் பிரச்னைகளையும், உளவியல் பிரச்னைகளையும் குறைக்க முடியும்’’ என்று கூறி சற்று நிம்மதி அடையச் செய்கிறார் சிந்தியா.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating