பிரசவ வலியை இனி அப்பாவும் அறியலாம்!! (மருத்துவம்)
‘பெற்றால்தான் தெரியும் பிரசவ வலி’ என்று கூறுவார்கள். மனைவி பிரசவ அறையில் இருக்கும்போது கணவன்மார்கள் என்ன செய்வார்கள்? திரையில் காண்பிப்பது போல அறைக்கு வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பார்கள். அதிகபட்சமாக… பிரசவ அறைக்குள் அனுமதிக்கப்பட்டால் மனைவியின் கையை ஆறுதலாக பற்றிக் கொள்வார்கள். ஆனால், மனைவியின் பிரசவ வேதனையை அனுபவிக்க எத்தனை பேர் முன் வருவார்கள்?
நியூயார்க்கைச் சேர்ந்த ‘பென்’ என்ற இளைஞர் தன்னால் முடியும் என்று நிரூபித்துள்ளார். நியூயார்க்கில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வரும் பென்கிம் தம்பதிக்கு லோலா மற்றும் பென் சார்லஸ் என இரு குழந்தைகள். தன் மனைவி மீது உள்ள அக்கறையை குழந்தைகளுக்கு வெளிப்படுத்த நினைத்த பென், பிரசவ வலியை அனுபவிக்க
தயாரானார்.
ஒரு பெண் அனுபவிக்கும் பிரசவ வலியை முழுவதுமாக அனுபவத்தில் அறிந்து கொள்ள முடிவெடுத்த பென், டாக்டர் சாமெடோமாவிடம் சென்றார். நிஜத்தில் ஒரு பெண்ணுக்கு பிரசவ அறையில் என்னென்ன செய்யப்படுமோ, அது போன்ற ஏற்பாடுகள் பென்னுக்கும் செய்யப்பட்டன. அவரை படுக்க வைத்து, எலெக்ட்ரோலெட்களை அடிவயிற்றுத் தசைகளில் பொருத்தினார் மருத்துவர். எலக்ட்ரானிக் ஸ்டிமுலேட்டரை இணைத்து அதன் மூலம் மின் அதிர்வுகளை தசைகளில் செலுத்தி வலி தூண்டப்பட்டது.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பிரசவ வலியைப் போலவே 1 முதல் 10 வரையான நிலைகளில் படிப்படியாக வலியை அதிகரிக்கச் செய்தார். சிறிது நேரத்தில் உச்சபட்ச வலியை தாங்க முடியாத பென் அலற ஆரம்பித்தார். ‘பெண்கள் அனுபவிக்கும் வலியில் மூன்றில் ஒரு பங்கு வரை மட்டுமே என்னால் தாங்க முடிந்தது’ என பென் தன் பிரசவ வலியின் அனுபவத்தை விவரித்தார்.
‘கணவர் அனுபவிக்கும் பிரசவ வலியைப் பார்த்து ரசித்துச் சிரிக்கும் மனைவி கிம்’ என்கிற வீடியோ உலகம் முழுவதும் வைரலாகப் பரவி இருக்கிறது. ‘அந்தக் கருவியை கொண்டு வாங்கப்பா… இங்குள்ள கணவர்களுக்கும் பொருத்தி வேடிக்கை பார்க்கலாம்’ என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating