முட்டை சாப்பிடுவதால் இதய நோய் வருமா? (மருத்துவம்)

Read Time:3 Minute, 11 Second

முட்டை சாப்பிடுவதால் இதயநோய் வருமா என்ற சந்தேகத்துக்கு கால்நடை பராமரிப்பு துறையின் முன்னாள் இணை இயக்குனர் டாக்டர். ரவிச்சந்திரன் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘கலப்படமே செய்ய முடியாத ஒரு உணவுப்பொருள் இருக்கிறது என்றால் அது முட்டை தான். அனைத்து தரப்பு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோழி முட்டையில் கோலின் என்கிற நீரில் கரையக்கூடிய வைட்டமின் அதிகளவு உள்ளது.

இந்த வைட்டமினை நமது உடலில் போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாது. கோலின் வைட்டமின் சிறு குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது. மேலும் முட்டையில் பகுதிப்பொருளாக உள்ள போலிக் அமிலத்தின் செயல்பாட்டுக்கு கோலின் உதவுகிறது. கல்லீரல் சிறப்பாக செயல்படும் போது உடலின் மற்ற பாகங்களும் இதனால் நலமுடன் இருக்கும். கல்லீரல் நன்றாக இயங்குவதற்கும் கோலின் வைட்டமின் பக்கபலமாக உள்ளது.

முட்டையில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தவிர்க்க முடியாத சத்தாக இருக்கிறது. மேலும் உணவு செரிமானத்தின் போது ஏற்படும் ஹோமோசிஸ்டின் என்ற அமினோ அமிலத்தை சிதைத்து விடுகிறது. இதனால் இதயநோய் ஏற்பட வாய்ப்புகள் தவிர்க்கப்படுகிறது. முட்டை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து. இதனால் புற்றுநோய்கள் பாதிப்பு குறையும். மேலும் ஆண்களுக்கு உரிய ப்ராஸ்டேட் புற்றுநோய், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படாதவாறு முட்டை பாதுகாக்கிறது.

முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகளவு இருந்த போதிலும் அது உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும் இதயநோய் பாதிப்பு உடையவர்கள் முட்டையை உணவில் தவிர்ப்பது நல்லது. முட்டையினை தினமும் உண்பதால் வலிமையான தசைகள், நரம்பு மண்டலத்தின் சிறப்பான செயல்பாடு, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்தல், இதயநோய் ஏற்படுவதை தவிர்த்தல் போன்ற உடல்நல நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும் சீரான உடல் வளர்ச்சிக்கு முட்டை துணையாக இருக்கிறது. எனவே அன்றாடும் ஒரு முட்டையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?! (மருத்துவம்)
Next post உடற்பயிற்சியினால் வரும் மனதைரியம்!! (மகளிர் பக்கம்)