போர்வீரர்களின் உணவுமுறை எப்படி இருக்கும் தெரியுமா? (மருத்துவம்)

Read Time:6 Minute, 23 Second

டயட்

கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து பணிபுரியும் நமக்கே ஆயிரம் உணவுமுறைகள் விதவிதமாக இருக்கின்றன. நிறைய ஆற்றலும், உடல் வலிமையும், சமயோசித புத்தியும் தேவைப்படுகிற போர்வீரர்களுக்கான உணவுமுறை எப்படி இருக்கும்?!நீங்கள் நினைப்பது சரிதான்… பழங்காலத்தில் போர்வீரர்கள் பயன்படுத்திய உணவுமுறையே இப்போது Warrior Diet என்ற பெயரில் பிரபலமாகிவருகிறது. அப்படி என்ன வாரியர் டயட்டில் சிறப்பு?!

கிட்டத்தட்ட பேலியோவைப் போல ஆதி மனிதனின் உணவுமுறைதான் இதுவும். ஆனால், பேலியோவில் இருந்து பலவிதங்களில் மாறுபடுகிறது வாரியர் டயட். முந்தைய காலத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்து வந்தபோது பகலில் விலங்குகளை வேட்டையாடச் சென்றுவிடுவான். அப்போது தன் குடும்பத்திற்காக இரை தேட காடுகளில் வெறும் வயிற்றோடுதான் சுற்றுவான். தான் சேகரித்த உணவை இரவில் குடும்பத்தோடு உண்பான். இதன் அடிப்படையிலேயே வாரியர் டயட் உருவாகியுள்ளது.

போர் செய்யும் பகல் வேளைகளில் குறைவாக உணவு எடுத்துக் கொள்வது அல்லது உணவே அருந்தாமல் இருப்பதுதான் போர்வீரர்களின் அடிப்படை உணவுமுறை. சூரியன் மறைந்து, போர் முடிந்தவுடன் இரவில் அதிகப்படியான அளவில் உணவு உட்கொள்வார்கள். இந்த உணவுமுறையால் போர் வீரர்கள் பகலில் சுறுசுறுப்பாக இயங்கவும், உடலை நன்கு ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும் முடியும் என்று நம்பினார்கள்.

இதன் அடிப்படையில், கடந்த 2001-ம் ஆண்டில் வாரியர் டயட்டை அறிமுகப்படுத்தினார் இஸ்ரேலிய சிறப்பு படையில் பணிபுரிந்த ஓரிஹோஃப்மெக்லர் (Ori Hofmekler) என்பவர். அதன் பிறகு ஸ்பார்டா மற்றும் ரோம் ராணுவத்தினரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது வாரியர் டயட். இதே உணவுமுறையை தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கும் வழங்குவதன் மூலம் தொழிலாளர்களிடம் அதிக உற்பத்தியைப் பெற முடியும் என்றும் ஓரிஹோஃப்மெக்லர் பரிந்துரைத்து வருகிறார்.

வாரியர் டயட்டில் பொதுவாக திரவ உணவுகள் மற்றும் சிறிது ஆரோக்கிய நொறுக்குத்தீனிகள் சாப்பிடலாம். இரவில் பெரிய அளவில் உணவை எடுத்துக் கொள்ளலாம். இந்த உணவுத்திட்டத்தில் சில வகை உணவுகளை எடுத்துக் கொள்ளவும், சிலவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற பட்டியலும் உண்டு. முக்கியமாக புரதம் நிறைந்த உணவுகளை காய்கறிகளோடு அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் போதிய ஊட்டச்சத்து, உடற்பயிற்சியைவிட முக்கியமானது. பகலில் உண்ணாநோன்பு, இரவில் சரியான உணவு எடுத்துக் கொள்வது என இரண்டையும் சேர்த்து கடைபிடிப்பதால் எடை இழப்பு மற்றும் உடல் உறுதித்தன்மைக்கு வழிவகுக்கிறது’ என்கிறார் ஹோஃப்மெக்லர். உண்ணாநோன்பு இருக்கும் நேரத்தில் கொழுப்பு உடலில் ஆங்காங்கே ஒரு சேர திரள ஆரம்பிக்கும். அதைத் தடுக்க உடலை சுறுசுறுப்பாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்வது அவசியம்.

வாரியர் உணவு முறையில் கடைபிடிக்க வேண்டிய விதிகள்

* ஒரு நாளில் பகலில் மட்டும் 9-10 கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக அருந்துவது முக்கியம். வெறும் தண்ணீராக இல்லாமல் அதோடு வெள்ளரி, புதினா இலைகள், லெமன், பட்டை போன்றவற்றை சேர்த்துக் கொள்வதால் அதிகப்படியான ஊட்டச்சத்து கிடைக்கும்.

* புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவாக உட்கொள்ள முடியும். புரதச்சத்து உடல்தசைகளை இறுக்கமாக்க உதவும்.

* உணவுக்கட்டுப்பாடு மட்டும் போதாது. போர் வீரர்களைப்போல உடலுக்கு கடுமையான பயிற்சி மிகவும் அவசியம். இரண்டையும் சம விகிதத்தில் பின்பற்றும்போது கண்டிப்பாக நீங்கள் பெற நினைத்த உடலமைப்பை எளிதில் அடையலாம்.

* இரவில் மட்டும் எண்ணெயில் பொரிக்காத சிக்கன், மீன், சப்பாத்தி, சாதம், காய்கறிகள், பழங்கள், முட்டை என ஹெவியாக எடுத்துக் கொள்ள
வேண்டும்.

* காலை மற்றும் மதிய உணவாக காய்கறி சாலட், முட்டை, மோர் போன்று மிகவும் லைட்டான உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* வாரியர் டயட்டை பின்பற்றும்போது கண்டிப்பாக பதப்படுத்திய உணவுகள், குளிர்பானங்கள், பீட்சா, பர்கர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* மருத்துவரின் ஆலோசனையும், பரிந்துரையும் இல்லாமல் வாரியர் டயட்டைப் பின்பற்றக் கூடாது. ஏனெனில், தவறான அணுகுமுறையால் பல பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு என்று ஓரிஹோஃப்மெக்லர் எச்சரிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹனுமானாசனம்!! (மகளிர் பக்கம்)
Next post அரசாங்க கடன் பிணையங்கள் பற்றி அறிமுகம் !! (கட்டுரை)