பாராளுமன்ற தேர்தல் – ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி !! (உலக செய்தி)

Read Time:3 Minute, 58 Second

இந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாடு மாலைத்தீவு. அங்கு நீண்டகால இராணுவ ஆட்சிக்கு பிறகு கடந்த 2008 ஆம் ஜனநாயக முறைப்படி ஜனாதிபதி தேர்தல் நடந்தது.

இதில் மாலைத்தீவு ஜனநாயக கட்சியின் (எம்.டி.பி.) தலைவர் முகமது நஷீத் வெற்றிப்பெற்று ஜனாதிபதியானார்.

ஆனால், பொதுமக்கள் போராட்டம் மற்றும் இராணுவ நெருக்கடி காரணமாக பதவி காலம் முடியும் முன்னரே 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு கட்சியை சேர்ந்த அப்துல்லா யாமீன் வெற்றிப்பெற்று ஜனாதிபதியானார்.

இவரது ஆட்சிக்காலத்தில் சர்ச்சைக்குரிய பயங்கரவாத தொடர்பு புகாரில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் 2016 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேறப்பட்டார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு அங்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் அப்துல்லா யாமீன் 2 வது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து எம்.டி.பி. கட்சியின் துணைத் தலைவர் முகமது சோலி களம் இறங்கினார். இதில் யாரும் எதிர்பாராதவிதமாக முகமது சோலி அமோக வெற்றிப்பெற்றார். அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதும், முகமது நஷீத் நாடு திரும்பினார்.

இந்த நிலையில், 87 இடங்களை கொண்ட மாலைத்தீவு நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினார்கள்.

இதனால் தேர்தலில் விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. 70 முதல் 80 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் தற்போதைய ஜனாதிபதி முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி மற்றும் மற்றொரு முன்னாள் ஜனாதிபதியின் அப்துல்லா யாமீனின் முற்போக்கு கட்சி ஆகியவற்றுக்கு இடையே பலத்த போட்டி நிலவியது.

ஆனால் எம்.டி.பி. கட்சி 3 இல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றது. அதவாது முதற்கட்ட தேர்தல் முடிவுகளின்படி மொத்தம் உள்ள 87 இடங்களில் 50 இடங்களில் எம்.டி.பி. கட்சி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் அந்நாட்டு ஊடகங்கள் எம்.டி.பி. கட்சி 68 இடங்களில் வெற்றிப்பெற்றதாக செய்திகள் வெளியிட்டன. இறுதி முடிவுகள் வெளிவந்த பின்னரே இது உண்மையா என்பது தெரியவரும்.

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் “இந்த முடிவுகள் மாலத் தீவில் ஜனநாயகத்தை உறுதிப் படுத்த வழி வகுக்கும்” என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆறு கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கும் அரசியல் எதிர்காலம் !! (கட்டுரை)
Next post தெலுங்கு நடிகரை காதலிக்கும் நடிகை!! (சினிமா செய்தி)