உடல் வெப்பத்தை தணிக்க…!! (மருத்துவம்)
அக்னி நட்சத்திர வெயில் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் இந்த ஆண்டில் கோடைக் காலம் தொடங்கியுள்ளது. தமிழகம், தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் வெயில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெயிலின் தாக் கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இம்மாதிரி இறந்தவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கோடை வெப்பத்தால் சென்ற ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000க்கும் அதிகம். இப்போதே முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால் உயிரிழப்புகளை பெருமளவு தடுக்க முடியும்.
வெப்பத் தளர்ச்சி
வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது உடலின் வெப்பம் சிலருக்கு 106 டிகிரி பாரன் ஹீட் அளவுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் ஆகிய அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப் பத்தின் காரணமாக உடலின் உப்புக்கள் வெளியேறி விடுவதால், இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு ‘வெப்பத் தளர்ச்சி’ என்று பெயர்.
தலை சுற்றல், மயக்கம்
நீண்ட நேரம் வெயிலில் நிற்பவர்கள், வேலை செய்பவர்கள், சாலையில் நடந்து செல் பவர்கள் திடீரென மயக்கம் அடைவதை அறிவீர்கள். இது ‘வெப்ப மயக்க’த்தின் விளைவு. ‘சன்ஸ்ட்ரோக்’ என்று அழைப்பது இதைத்தான். வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள ரத்தக் குழாய்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்கு வதற்கு வழிசெய்து விடுகிறது. இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்து விடுகி றது. ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்கு போதுமான ரத்தம் கிடைப்பதில்லை. உடனே, தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகிறது. சிலருக்கு மரணமும் ஏற்படுகிறது.
புறஊதா கதிர்களின் ஆபத்து
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் கோடை வெயிலில் வெளிப்படுகின்ற புற ஊதாக் கதிர்களால் ஏற்படுகிற உடல் பாதிப்புகள் அதிகம். இக்கதிர்களில் ‘ஏ’, ‘பி’ என்று இரு வகை உண்டு. ‘ஏ’வகைக் கதிர்கள் இளங்காலையிலும் மாலைப்பொழுதிலும் வெளிப்படும். இவை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக, காலை 10 மணி முதல் மாலை 4மணி வரை தாக்கும் வெயிலில் ‘பி ’வகை கதிர்கள் வெளிப் படும். இவை ‘சன்ஸ்ட்ரோக்’ முதல் சரும புற்றுநோய் வரை உடலில் பலவித பாதி ப்புகளை ஏற்படுத்தலாம்.
குளிச்சியான இடம்
வெப்ப மயக்கம் ஏற்பட்டவரை குளிர்ச்சியான இடத்துக்கு மாற்றி, ஆடைகளைத் தளர் த்தி, காற்று உடல் முழுவதும் படும்படி செய்ய வேண்டும். அவரை சுற்றி கூட்டம் சேர் வதைத் தவிர்க்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும். மயக்கம் தெளிந்ததும் குளுக்கோஸ் தண்ணீர், பழச்சாறு அல்லது நீர்மோர் கொடுப்பது அவசி யம். இது மட்டும் போதாது. அவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
சர்மத்தை தாக்கும்
சருமத்துக்குப் போதிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் அதிக நேரம் அலைகிறவர் களுக்கு சருமம் கறுப்பாகி விடுவதை கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம், சூரியக் கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாக சருமத்தை தாக்கும் போது, அதிலுள்ள ‘பி’வகை புற ஊதாக் கதிர்கள் சருமத்தின் செல்களில் உள்ள டி.என். ஏ.க்களை அழிக் கின்றன. அந்த அழிவை ஈடுகட்டுவதற்காக சருமத்துக்குக் கறுப்பு நிறம் தருகின்ற மெலனின் நிறமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், சருமம் கறுத்துவிடுகிறது.
வெப்பத்தைத் தணிக்க
கோடையில் தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். ஐஸ் தண்ணீரைவிட, மண் பானைத் தண்ணீர் நல்லது. எண்ணெயில் பொரித்த, வறுத்த, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண் டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்ஸா, ஐஸ்கிரீம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. அதே போல், சூடான, காரமான, மசாலா கலந்த, உப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
வாந்தி, வயிற்று போக்கு
பலருக்கு சூரிய ஒளியே ஒவ்வாமையை உண்டாக்கும். வெயில் பட்aடாலே உடலெங்கும் அரிக்கத் தொடங்கிவிடும். சருமம் சிவந்து வட்ட வட்டமாகத் தடிப்புகள் தோன்றும். அவற்றில் நீர் கோத்துக்கொள்ளும். இதைத் தொடர்ந்து சருமம் உரியும். இதற்கு ‘சூரிய ஒளி நச்சு அரிப்பு’ என்று பெயர். இவை தவிர, கோடையில் பொதுவாகத் தாக்கும் நோய்கள் வியர்க்குரு, வேனல்கட்டி, தேமல் தொற்று, வாந்தி, வயிற்றுப் போக்கு, நீர்க்கடுப்பு எனப்பட்டியல் நீளும்.
எந்த உணவுகளை சாப்பிடலாம்
இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளிக்கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகள். மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்பூசணி சூப், தக்காளி சூப் வகைகளை சாப்பிடலாம். திராட்சை, சாத்துக்குடி ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, முலாம் பழம், ஆப்பிள் போன்றவற்றின் பழச்சாறுகளையும் அருந்தலாம். நுங்கு, கிர்ணி, கொய்யா போன்றவையும் உடல் வெப் பத்தைத் தணிக்க உதவும்.
உச்சத்தில் அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது 42 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது புற ஊதாக் கதிர்களின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல், சரும மும் அதை சார்ந்த ரத்தக் குழாய்களும் விரிந்து சிவந்துவிடும். அந்த வேளையில் ‘CXCL5’ எனும் புரதம் சருமத்தில் உற்பத்தியாகும். இது அருகிலுள்ள நரம்புகளைத் தூண்டும். இதன் விளைவால் சருமத்தில் எரிச்சல், வலி, வெப்பப் புண்கள் ஏற்படும்.
எந்த பானங்கள் குடிக்கலாம்
காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதை குறைத்துக் கொண்டு, இளநீர், நீர் மோர், நன்னாரி சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இள நீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சுற்று சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன.
ஆரோக்கியம் நம் கையில்…
கோடைக் காலத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். பகல் 11 மணியிலிருந்து மாலை 4மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. சருமத்தில் ‘சன்ஸ்கிரீன் லோஷ’னை பூசிக்கொள்ளலாம். கைவசம் சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம். காற்றோட்டமான கதர், பருத்தி ஆடைகள் கோடை காலத்துக்கு ஏற்றவை. இறுக்கமான ஆடைகளை தவிர்த்து,தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வரும் வெயில் ஒரு சவால்தான். ஆனால், அதில் இருக்கும் ஆபத்துகளை முழுமையாக புரிந்து கொண்டால், அதன் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ள முடியும். நம்ஆரோக்கியம் நம் கையில்!
Average Rating