சர்வாங்க ஊர்த்வ பத்மாசனம்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 23 Second

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ எனும் பழமொழிக்கு ஏற்ப நாம் நம் வாழ்வில் நோயில்லாமல் வாழ யோகாசனம் உதவுகிறது. உடலின் பகுதிகளை நீட்டுதல், மடக்குதல், திருப்புதல், அசைத்தல் எனும் நிலைகளைக் கொண்டு மூச்சுக் காற்றை ஒழுங்குபடுத்த முறையான ஆசனங்களை செய்து பழகலாம். நல்வாழ்வினை பெற உடல்நலம் மட்டுமின்றி மனநலமும் அவசியம். அதற்கு ஆசனங்கள் பேருதவி புரிகிறது. ‘சர்வாங்க ஆசனம்’ மற்றும் ‘பத்மாசனம்’ இரண்டும் ஆசனங்களின் நிலைகளில் கலந்து வருவதால் அதற்கு சர்வாங்க ஊர்த்வ பத்மாசனம் எனப் பெயர் பெற்றது.

செய்முறை:

முதலில் மல்லாந்து படுத்து மூச்சை நன்கு இழுத்து வெளியிடவேண்டும். பின் இடுப்பு பகுதியையும் சேர்த்து இரு கால்களையும் மேலே தூக்க வேண்டும். இரு கால்களையும் மேலே தூக்கும் போது மூச்சை மெதுவாக உள்ளே இழுக்க வேண்டும். பின்பு இரு கைகளையும் இடுப்புப் பகுதியை அணைத்து பிடித்தவாறு மூச்சுக் காற்றை மெல்ல உள்ளே இழுக்க வேண்டும். இரு கைகளையும் அழுத்தமாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

பின் வலது காலை இடது தொடை மீதும், இடது காலை வலது தொடை மீதும் பத்மாசனம் போன்று போட வேண்டும். பார்வையை மூக்கு நுனி மீது வைத்து மூச்சுக்காற்றை மெதுவாக உள்ளே இழுத்து விடவும். பின் கால்களை ஓய்வு இயல்பு நிலைக்கு கொண்டு வந்து மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். இதே முறையில் நம்மால் முடியும்வரை செய்யலாம்.

சர்வாங்க ஊர்த்வ பத்மாசனத்தின் பயன்கள்:

தலைப்பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது. தோள் மற்றும் கழுத்துப் பகுதிக்கு வன்மை தந்து உதவுகிறது. மார்பு பகுதி விரிவடைந்து இதயத்தில் காற்றோட்டத்தை சீராக்குகிறது. நுரையீரலுக்கு காற்றோட்டத்தை அதிகப்படுத்துகிறது. கண்களுக்கு பார்வையை அதிகப்படுத்துகிறது.

முள்ளந்தண்டு எலும்புகளுக்கு உறுதியை அளிக்கிறது. இடுப்பு மற்றும் எலும்பு தேய்வினால் வரும் வலியை குறைத்து அதை சரி செய்கிறது. தொடைப் பகுதி தசைகளை வன்மை அடையச் செய்கிறது. மலச்சிக்கலை தடுக்கிறது. செரிமான மண்டலத்தை சீர் செய்கிறது. கல்லீரல் வீக்கத்தை சீர் செய்து கொள்ள உதவுகிறது. சிறுநீர்ப் பாதை தாபிதத்திதை சீர் செய்ய உதவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இண்டர்வெல் டிரெயினிங் தெரியுமா?! (மருத்துவம்)
Next post அலைபேசியில் அலையும் குரல்! (அவ்வப்போது கிளாமர்)