சக்ராசனம்!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 14 Second

நாம் அனைவரும் நம் உடல் உறுப்பு மற்றும் மனதையும் பேணிக்காக்க பல மருத்துவ முறைகளையும், பயிற்சி முறைகளையும் செய்து வருகிறோம். உலகமயமாக்கல் என்னும் விளைவால் மருத்துவ வசதிகளைப் பெறுவதில் பெரும் பொருட்செலவை செய்ய வேண்டிய நிலை உள்ளது. பொருட்செலவு இல்லாமல் நம் உடல் மற்றும் மனதை நல்ல நிலையில் வைக்க சித்தர் பெருமக்கள் உருவாக்கிய மருத்துவ முறையை சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியாக கொண்டு வந்து அதன் மூலம் மனதை கட்டுப்படுத்துவது ஆசனம் செய்வதன் நோக்கமாகும். யோகா முறையை செய்ய ஆசனப் பயிற்சிதான் முதற்பகுதியாகும்.

ஆசனம் என்பது “இருக்கை” என்று இலக்கியத்தில் கூறப்படுகிறது. ஆசனம் என்றால் ஒரே இடத்தில் இருப்பது என்பதைக் குறிக்கும். உடல் உறுப்புகளைக் கேடு வராமல் சீராக்குவதும் உடலை இளமையாக வைத்திருக்கவும் இப்பயிற்சி முறைகள் உதவுகிறது.

சக்ராசனத்தின் பெயர்காரணம்:

இவ்வாசனம் செய்யும் போது உடல் சக்கரத்தை போன்ற வடிவத்தில் இருப்பதால் இதற்கு சக்ராசனம் என்று பெயர். இந்த ஆசனத்தின் முழுமையான நிலையை ‘பூர்ண சக்ராசனம்’ என்பர்.

சக்ராசனம் செய்முறை:

ஆசனம் செய்யும் நிலையில் முதலில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். பின் கால்களை மடித்து புட்டத்துக்கு அருகில் இரு பாதங்களையும் தரையில் பதிந்திருக்குமாறு வைக்கவும். இரு கைகளையும் பின்பக்கம் கொண்டு சென்று தோள்களுக்கு அடியில் விரல்கள் கால்களைப் பார்த்து இருக்குமாறு வைக்கவும்.

பிறகு ஆழ்ந்த உள்மூச்சுடன் கைகள் மற்றும் கால்களை நன்கு தரையில் ஊன்றி இடுப்பு, தோள் மற்றும் தலைப்பகுதியை தரையில் இருந்து தூக்கவும். பின் கழுத்தை எந்த இறுக்கமும் இல்லாமல் இலகுவாகத் தொங்கவிட்டு முதுகை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தூக்கவும்.

இந்நிலையில் 1நிமிடம் வரை சாதாரண சுவாசத்தில் இருந்து பிறகு மூச்சை வெளிவிட்டுக் கொண்டே இயல்பு நிலைக்கு திரும்பவும். மேலே செய்த இறுதி நிலையில் கைகளும், கால்களும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டால் அது பூர்ண சக்ராசனம்.

சக்ராசனத்தின் நன்மைகள்:

மார்பு பகுதி விரிவடைந்து நுரையீரலுக்கு அதிக உயிர்க்காற்று செல்கிறது. கண்பார்வை கூர்மையடைகிறது. வயிற்றுப் பகுதியில் தேவையற்ற தசைப் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. கை மற்றும் கால்களை வன்மைப்படுத்துகிறது.

நாளமில்லா சுரப்பி மற்றும் மூளை செல்களை தூண்டி உடலின் இயக்கத்தை சீர் செய்கிறது. பெண்களின் கருப்பை கோளாறுகளை சரி செய்கிறது. கல்லீரல், கணையம், மண்ணீரல் இவற்றின் இயக்கத்தை சீர் செய்கிறது.

இரத்தத்தை சுத்தம் செய்து மனச்சோர்வு, மனதில் அச்சங்கள் இவற்றை போக்கி உள்ளத்தில் நல்ல தெளிவையும், அமைதியையும் தோன்ற வைக்கிறது. குடல் இறக்கம் குணமாகிறது. சிறுநீரகம் புத்துணர்வை பெறுகிறது. செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அளவுக்கு மீறினால்..? (அவ்வப்போது கிளாமர்)
Next post மதுரையில் பள்ளி மாணவனிடம் ஆசிரியை செய்த கேவலத்தை பாருங்க!! (வீடியோ)