கடி சக்ராசனம்…!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 57 Second

கடி என்றால் சமஸ்கிருதத்தில் நெஞ்சு என்று பொருள். அதன்படி கடிசக்ராசனம் என்பது நெஞ்சு சூழ அதாவது இதயம், நுரையீரலைக் காக்கும் ஆசனமாகும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யும் ஆசனமாகும்.

விரிப்பின் மீது நேராக நின்று கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்தபடி வைத்துக்கொள்ள வேண்டும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேராக வைத்துக்கொண்டு, கால்கள் இரண்டையும் அரை மீட்டர் அளவுக்கு விரித்து கைகள் தோள்பட்டைக்கு நேராக நீட்டி உள்ளங்கை வெளிப்புறத்தைப் பார்த்தபடி வைக்கவும்.

இடதுகையை வலது தோள்பட்டையின் மீது வைத்து வலது கையை முதுகுப் பக்கமாக உள்ளங்கை வெளிப்புறத்தைப் பார்த்தப்படி வைத்துக்கொள்ளவும். இடுப்பை எந்த அளவுக்க முடியுமோ அந்த அளவுக்கு வலது புறமாக திருப்பவும். இடுப்புடன் சேர்த்து தலையையும் திருப்பவும். ஒருசில விநாடிகள் இந்த நிலையிலிருந்து விட்டு மீண்டும் கைகளை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

இப்போது வலது கையை இடது தோள்பட்டையின் மீது வைக்கவும். இடதுகையை முதுகுப் பக்கமாக உள்ளங்கை வெளிப்புறத்தைப் பார்த்தபடி வைத்துக்கொண்டு மீண்டும் இடுப்பை இடது பக்கமாக வளைத்து ஒரு சில விநாடிகள் இருந்து மீண்டும் கைகளை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு மாறி மாறி இடது, வலது என 5 முறை செய்வது நல்லது.

பயன்கள்

இது இடுப்புப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து இடுப்புப் பகுதிக்கு வலுவைக் கொடுக்கும். தொப்பையைக் குறைக்கும். அடிவயிற்று சதை இறுகும். முதுகெலும்பு, தண்டுவடம், பலமடைவதுடன் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்கும்.

இதயத்திற்கு பலம் கொடுத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். உடல் அசதி, மன அழுத்தம், சோர்வு, தீரா சிந்தனை போன்றவற்றைப்போக்கும். மற்ற ஆசனங்கள் செய்யும்போது இந்த ஆசனத்தையும் செய்துவந்தால் இதன் முழுப் பலனைப் பெறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவு உணவுகளை பாலில் கலந்து உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி!! (மருத்துவம்)