மனதை அமைதியாக்கும் யோகாசனம்!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 13 Second

நம்மில் பலர் உயரம் இரண்டு அங்குலம் ஏறினால் கூட நாம் எவ்வாறு வாழ்கின்றோம் என்பதைப் பற்றி நமது, மற்றும் பிறரது கண்ணோட்டத்தில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துவதுண்டு. ஒரு சமீபத்திய ஆய்வு ஒரு நல்ல உயரம் என்பது வெறும் உடல் அம்சம் மட்டுமல்ல, அதிக நுண்ணறிவு, சிறந்த வேலை வாய்ப்புக்கள், மற்றும் வாழ்க்கையை நோக்கி நேர்மறையான எண்ணப்போக்கு ஆகியவையும் இணைந்தவை என்று கூறுகின்றது.

பிரிட்டனில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வு, பெற்றோரின் உயரம் ஒரு முக்கியமான காரணியாக இருந்த போதிலும் நல்ல உயரத்தை அடைவது என்பது மரபணு சம்பந்தப்பட்டது மட்டுமேயன்று என்று அறிவுறுத்துகின்றது. நமது உணவு, வாழ்க்கை முறை, எண்ணங்கள் அனைத்தும் முக்கியமானவை. ஆனால் என்ன உண்கின்றோம், எவ்வாறு வாழ்கின்றோம் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் உயரமாக வளர்வது என்பது கடினமான ஒன்றாகவே இருக்கின்றது.

தற்கால அழகுக்கான அறுவை சிகிச்சை போன்ற முறைகளை நீங்கள் தேடவில்லை என்றால், இந்தப் பழமையான முறையை உங்கள் பாணியாகத் தேர்ந்தெடுக்கலாம்.

தினமும் சில நிமிடங்கள் சீராகச் செய்யும் யோகப்பயிற்சி, உங்கள் உடல் வளரவும், மனம் அமைதியடையவும் உதவுகின்றது. உங்கள் உயரத்தை அதிகரிக்க உதவும் சில யோகா தோற்றப்பாங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. புஜங்காசனா:

பாம்பு போன்ற இந்தத் தோற்றப்பாங்கு, தோள்கள், மார்பு, மற்றும் அடிவயிற்றுத் தசைகளை நீட்டுகின்றது. மேலானததோற்றப் பாங்கின் மூலம் உயரத்தைக் கூட்டுகின்றது.

2. தடாசனா :

முதுகெலும் பினை நீட்டி நேராக்க மிகச் சிறந்த ஆசனம் இது. உயரத்தையும் கூட்டுகின்றது.

3. நடராஜனாசனா :

இது நுரையீரல்கள், மார்பு ஆகியவற்றை நீட்டுவதுடன், பிட்டம், கால்கள், மணிக்கட்டுகள், கைகள் மற்றும் முதுகு ஆகியவற்றின் தசைகளையும் பலப்படுத்துகின்றது.

4. சூரிய நமஸ்காரம்:

யோகத் தோற்றப்பாங்குகள் மீழ் சுற்றான முறையில் செய்யப்படும் சூரிய நமஸ்காரம், மூட்டுகள் தசைகள் ஆகியவற்றைக் குறைந்த காலத்தில் தளர்த்துகின்றது. அடிவயிற்று உறுப்புக்கள் மாறி மாறி நீட்டி, சுருக்கப்படுவதால், அவ்வுறுப்புக்களின் முறையான செயல்பாடு உறுதி செய்யப்படுகின்றது. மாறி மாறி முன்னும் பின்னும் குனிந்து நிமிரும் இந்தப்பயிற்சியால் முதுகு ஆழ்ந்த பயன் விளைவினைப் பெறுகின்றது. முதுகுப் பகுதி தளர்வினை அதிகரிப்பதால் மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கின்றது.

உடல் வளர்ச்சி என்பது பல்வேறு காரணிகளால் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றது. யோகா நிச்சயமாக உங்கள் உடல் மேலும் மிருதுவாக உதவி, உயரத்தையும் அதிகரிக்கின்றது.ஆனால் அதே சமயம், ஒருவர் உடல் பெரும் ஊட்டச் சத்து வகையின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். சீரான யோகபயிற்சி, ஆரோக்கியமான உடலையும் மனதையும் அடையச் செய்யும், நல்ல உணவுத் தேர்வுகள், சக்தியை பராமரிக்க உதவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய விமானத்தை செலுத்தியவர் இஸ்ரேலிய விமானியா? ( வீடியோ)
Next post நோய்களை விரட்டும் ஓமம்!! (மருத்துவம்)