காய்ச்சலை போக்கும் பேய் விரட்டி!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், அனைத்துவித காய்ச்சலை குணப்படுத்த கூடியதும், மூட்டுவலியை போக்கவல்லதும், வயிற்றுவலி, உப்புசத்தை போக்கும் தன்மை கொண்டதுமான பேய் விரட்டி செடியின் நன்மைகள் குறித்து, நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பேய் விரட்டி துளசி இனத்தை சேர்ந்தது. இது, காய்ச்சலை தணிக்க கூடியது மட்டுமின்றி வலி நிவாரணியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் மூலிகையாக விளங்குகிறது. பேய் விரட்டியானது இருமல், சளி, காய்ச்சலை இல்லாமல் போக்கும் அற்புத மருந்தாகிறது. மூட்டுவலியை போக்குகிறது. இதனுடைய புகை கொசுக்களை விரட்டும் தன்மை உள்ளது. மழைக்காலங்களில் இதை பயன்படுத்துவதால், காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.
பேய் விரட்டி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பேய் விரட்டி இலைகள், சீரகம், மிளகு.
செய்முறை: 6 பேய் விரட்டி இலைகளை துண்டுகளாக்கி எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் நீர்விட்டு அரை ஸ்பூன் சீரக பொடி, கால் ஸ்பூன் மிளகு பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் எடுத்துவர வைரஸ் காய்ச்சல், டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல், குளிர் காய்ச்சல் என எவ்வித காய்ச்சலும் சரியாகும். உடல் வலி சரியாகும். சளி இல்லாமல் போகும். பேய் விரட்டி நோய்களை விரட்டும் தன்மை உடையது.
பேய் விரட்டியை பயன்படுத்தி மூட்டுவலி, வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பேய் விரட்டி இலைகள், விளக்கெண்ணெய்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் விட்டு பேய் விரட்டி இலைகளை போட்டு வதக்கவும். இளஞ்சூட்டுடன் எடுத்து கட்டி வைத்தாலோ அல்லது ஒத்தடம் கொடுத்துவர மூட்டுவலி, வீக்கம் குணமாகும். மூட்டுகளில் ஏற்படும் அழற்சியை குறைக்கும். எவ்வித வலியாக இருந்தாலும் இதை பயன்படுத்தும்போது வலி, வீக்கம் இல்லாமல் போகிறது.
பேய் விரட்டி இலைகளை பயன்படுத்தி வயிற்றுவலி, உப்புசம், பொருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பேய்விரட்டி இலைகள், உப்பு, மோர்.செய்முறை: பேய் விரட்டி இலை பசையை பிழிந்து சாறு எடுக்கவும். 10 மில்லி சாறுடன் மோர், சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்துவர வயிறுவலி, உப்புசம், கழிச்சல், பொருமல் சரியாகும். வயிற்றில் சேரும் வாயுவை வெளியேற்றும். சாலையோரங்களில் கிடைக்கும் பேய் மிரட்டி செடி நன்மை தரக்கூடியது. மழைக்காலத்தில் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இதை பயன்படுத்தி நன்மை பெறலாம். தொண்டைக்கட்டு, வலி, தொற்றுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை இலை, தேன். செய்முறை: எலுமிச்சை இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடித்து தேன் சேர்த்து குடிக்கலாம். மேலும், இதை வாய் கொப்பளித்துவர தொண்டைக்கட்டு குணமாகும்.
Tags:
Average Rating