மனிதர்களால் 50 ஆண்டுகளில் 1,700 உயிரினங்கள் அழியும் அபாயம்!! (கட்டுரை)

Read Time:2 Minute, 14 Second

உலகம் முழுவதும் அடுத்த 50 ஆண்டுகளில் 1700க்கும் அதிமான உயிரினங்கள் அழிந்து போகும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனிதர்கள் பயன்படுத்தும் நிலப்பரப்பு அதிகரித்து வருவதாகவும் இதனால், தற்போது உயிரினங்களின் வாழ்விடங்கள் 30 முதல் 50 சதவிகிதம் வரை அழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக 2070ம் ஆண்டில் மிகப்பெரிய பேரழிவை ஏனைய உயிரினங்கள் சந்திக்கும் எனவும், இந்நிலை நீடித்தால் மனிதர்களுக்கான பேரழிவு விரைவில் தொடங்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த 1700 உயிரினங்களில் 436 பறவைகள் இனங்கள், 376 பாலூட்டிகள் மற்றும் 886 வகையான நீர்நிலை விலங்குகள் அதிக பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக இந்தோனேசியாவின் லாம்போக் குறுக்கு தவளை, தெற்கு சூடானின் நைல் லெஸ்வெ, பிரேசிலின் ட்ரீஹன்டர், அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே ஆகிய பகுதிகளில் வாழும் ரெட்ஹான்டர் ஆகிய உயிரினங்கள் அடுத்த 50 ஆண்டுகளில் தங்களின் புவியியல் வரம்பில் பாதியை இழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, மீசோமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ள உயிரினங்கள் பெரும் அழிவை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லே, கல்லே கரைந்துவிடு! (மருத்துவம்)
Next post வீட்டில் பிரிட்ஜ் பயன்படுத்துபவர்களா? ( மகளிர் பக்கம்)