வேட்பாளர் செலவு பட்டியல் – மட்டன் பிரியாணி 200 ரூபா!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 53 Second

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகின்றன. இதில் களம் காண வாய்ப்பு கிடைத்திருக்கும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

தேர்தலில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற முடிவோடு களத்தில் இறங்கி இருக்கும் அவர்கள், வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு வகையில் பிரசாரங்களை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இதற்காக சிலப் பல கோடிகளை வாரியிறைக்கவும் சிலர் தயங்குவது இல்லை.

ஆனால் அப்படிப்பட்ட வேட்பாளர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் தேர்தல் கமிஷன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சம் ரூ.70 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது வேட்பாளர் தங்கள் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அதிகப்பட்ச விலை விவரங்களை தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. இது தொடர்பான பட்டியல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா? (சினிமா செய்தி)
Next post கணவன் மனைவி சேர்ந்து செய்யும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள்!! (வீடியோ)