ட்ரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகையின் வழக்கு தள்ளுபடி!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 34 Second

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் வழக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் மத்திய நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்டு டிரம்ப்.

அப்போது ஆபாச பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ், தன்னுடன் டிரம்ப் பல முறை செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார் என்றும், இதுகுறித்து வெளியே சொன்னால் அது ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு எதிராக திரும்பும் என்பதால், தனக்கு டிரம்ப் வக்கீல் மைக்கேல் கோஹன் 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் பணம் தந்தார் என்றும் கூறி அப்போது பரபரப்பை ஏற்படுத்தினார்.

பணம் வாங்கிக்கொண்டு, டிரம்ப் செக்ஸ் உறவு விவகாரத்தை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக அவருடன் போட்ட ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மத்திய நீதிமன்றத்தில் ஸ்டார்மி டேனியல்ஸ் வழக்கு தொடுத்தார்.

அந்த ஒப்பந்தத்தில் ஸ்டார்மி டேனியல்ஸ் சார்பில் அவரும், டிரம்ப் சார்பில் அவரது வக்கீல் மைக்கேல் கோஹனும் கையெழுத்து போட்டிருந்தனர். ஆனால் ஒப்பந்தத்தில் தானும், சம்பந்தப்பட்ட டிரம்பும்தான் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்; அவர் கையெழுத்து போடாத நிலையில், அந்த ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் மத்திய நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் ஆட்டீரோ தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

டிரம்ப் மீது ஸ்டார்மி டேனியல்ஸ் தொடர்ந்த அவதூறு வழக்கையும் இதே நீதிபதி கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது நினைவுகூரத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்யாண தேன் நிலா!! (அவ்வப்போது கிளாமர்)
Next post குழந்தைகளுக்கு கை உறிஞ்சும் பழக்கம் இருக்கா!! (மருத்துவம்)