அபிநந்தன் வர்தமான் இந்தியாவிடம் ஒப்படைப்பு; பிரதமர் வாழ்த்து!! (உலக செய்தி)
பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.
மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு பிறகு இரவு 9.15 மணி அளவில் வெளியுறவுத்துறை பெண் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அபிநந்தனை வாகா எல்லைக்கு அழைத்து வந்தனர்.
எல்லையில் உள்ள மிகப் பெரிய இரும்பு ‘கிரில் கேட்’ திறக்கப்பட்டதும், அதன் வழியாக அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் வந்தார்.
அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அதிகாரிகள் அபிநந்தனை வரவேற்றனர். அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் வாழ்த்து கோஷங் களை எழுப்பினார்கள்.
விடுதலையாகி வந்த அபிநந்தனை, யாரும் சந்திக்க விமானப்படை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவரை உடனடியாக அங்கிருந்து காரில் அமிர்தசரசுக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த புதன்கிழமை பாகிஸ்தானிடம் பிடிபட்ட அபிநந்தன், 3 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பி இருக்கிறார்.
விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபிநந்தனின் வீரம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
More Stories
ஒரு கிராமத்து மாடலின் கதை!! (மகளிர் பக்கம்)
திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடி எனும் கிராமத்தில் பிறந்தவர் நந்தினி. இன்று நமக்கு பிடித்த பல பிரபலங்கள் கிராமங்களிலிருந்து வந்தவர்களே என்றாலும். அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டே சாதித்து...
கொரோனா நெருக்கடி தீர நீண்ட காலம் பிடிக்கும் !! (உலக செய்தி)
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், அந்த நோய்த்தொற்று நெருக்கடி முற்றிலுமாக த் தீா்வதற்கு நீண்ட காலம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரேஸ்...
இந்த மாநிலத்தில் 15 நாள்களுக்கு ஊரடங்கு!! (உலக செய்தி)
மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் 15 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவித்தாா். இந்த...
தங்க நகரம் கண்டுபிடிப்பு!! (உலக செய்தி)
எகிப்து நாட்டின் லக்ஸர் பகுதியில் மிகப் பழமையான நகரமாகக் கருதப்பட்டு வந்த 3000 ஆண்டுகள் பழமையான இழந்த தங்க நகரத்தை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து நாட்டைச்...
நோய் தடுக்கும் தாம்பூலம்!! (மருத்துவம்)
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். கி.மு. 2-ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்ட...
சிறையில் இருந்து 400 கைதிகள் தப்பியோட்டம் !! (உலக செய்தி)
கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஹைட்டியில், சிறையிலிருந்து 400 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினா். இந்தச் சம்பவத்தில் சிறைத் துறை இயக்குநா், சமூகவிரோதக் கும்பல்...
Average Rating