அதிமுக கூட்டணியில் இணைவது உறுதி! (உலக செய்தி)

Read Time:5 Minute, 44 Second

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்துள்ளது.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தே.மு.தி.க, த.மா.கா. கட்சியையும் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தே.மு.தி.க. கட்சி அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், 1 மேல் சபை எம்.பி. சீட் ஒதுக்கப்பட்டதால் அதை விட கூடுதலாக 1 தொகுதி ஒதுக்கினால் கூட்டணியில் சேருவதாக விஜயகாந்த் நிபந்தனை விதித்தார். ஆனால் தே.மு.தி.க.வுக்கு அவ்வளவு தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று அ.தி.மு.க. கூறியது.

தே.மு.தி.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதிகளும், 1 மேல் சபை சீட்டும் தருவதாக அ.தி.மு.க. தற்போது கூறி உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இருப்பதால் ஓட்டு வங்கி அதிகமாக இருப்பதாகவும், இந்த கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷிடம் அ.திமு.க. மூத்த நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

தே.மு.தி.க. கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் இருப்பதால் எப்படியாவது அ.தி.மு.க.கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் விரும்புகிறது. இதற்காக டெல்லியில் இருந்தும் மத்திய மந்திரி பியூஸ்கோயல் சுதீஷிடம் பேசியுள்ளார்.

அ.தி.மு.க – பா.ஜனதா இரு தரப்பில் இருந்தும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் மற்றும் பிரேமலதாவிடம் பேசி வருகின்றனர். இதில் அ.தி.மு.க. கூட் டணியில் சேர விஜயகாந்த் சம்மதம் தெரிவித்து விட்டதாக தெரிகிறது. தே.மு.தி.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதியும் 1 மேல்- சபை சீட்டும் வழங்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், புதுச்சேரி என்.ஆர். காங்கிரசுக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் அ.தி.மு.க. வசம் 22 தொகுதிகள் இருக்கும். இதில் 1 தொகுதி த.மா.கா.வுக்கு ஒதுக்கியது போக மீதம் உள்ள 21 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட முடிவு செய்துள்ளது.

சென்னையில் வருகிற 6 ஆம் திகதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து தங்களது பலத்தை காட்ட பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

அதற்கேற்ப அ.தி.மு.க. தே.மு.தி.க. இடையே வருகிற 3 ஆம் திகதி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தே.மு.தி.க.வுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” என்று கூறினார்.

இதே போல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், “தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். ஓரிரு தினங்களில் நல்ல முடிவு கிடைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. கடும் முயற்சி மேற்கொண்டது. 3 எம்.பி. தொகுதியும், 1 மேல் சபை தொகுதியும் தருவதாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தி.மு.க. அதிருப்தி அடைந்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி விஜயகாந்தை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டார். கடைசி நேரத்தில் அதில் பலன் இல்லாமல் போய் விட்டது. அதேபோல இப்போது 2 வது முறையாக தி.மு.க. முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 350 சிக்ஸ் அடித்த முதல் இந்தியர் – எம்எஸ் டோனி சாதனை!
Next post கல்யாணம் எனக்கு பொருந்தாது…. !! (சினிமா செய்தி)