செய்யக்கூடாதவைகள் சில!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 33 Second

மாத்திரைகள் மற்றும் மருந்துகளைக் குழந்தைகளுக்கு எட்டும் வகையில் வைக்கக்கூடாது. கைக்கு எட்டாத உயரத்தில் பூட்டப்பட்ட அலமாரிகளில் வைக்கவும். ஒருபோதும் மாத்திரை மருந்துகளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்காதீர்கள். அவை தரம் கெட்டுவிடும். மருத்துவ சிகிச்சை முடிந்த பின் மீதமுள்ள மருந்து மாத்திரைகளை அவற்றை வாங்கினவர்களிடம் திரும்பக் கொடுத்துவிடுங்கள் அல்லது கழிப்பறையில் போட்டு தண்ணீரை ஊற்றி அப்புறப்படுத்துங்கள்.

ஒருபோதும் இருட்டில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். எப்பொழுதும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது அல்லது கொடுக்கும் போது என்ன மாத்திரை என லேபிலைப் படிக்கவும். எலுமிச்சை பழ பானங்கள், குளிர் பானங்கள் அல்லது பிற பானங்கள் உள்ள பாட்டில்களில் கெமிக்கல்,மருந்து உள்ளிட்ட நச்சு திரவங்களை ஒருபோதும் ஊற்றி வைக்காதீர்கள். பிள்ளைகள் அவற்றைத் தவறாக அறிந்துகொண்டு அவற்றைக் குடித்துவிடும்.

வீடு துப்புறவு செய்ய பயன்படுத்தும் டிடெர்ஜென்ட், ப்ளீச்சிங் பவுடர்,கெமிக்கல் உள்ளிட்டவைகளை ஒருபோதும் கை/பாத்திரம் கழுவும் சிங்க் தொட்டிகளுக்குக் கீழே வைக்காதீர்கள். தவழும் குழந்தைகள் அவற்றை தட்டி விட்டோ அல்லது கீழே தள்ளியோ விடுவர்.

( வெளுப்பான் மற்றும் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துவிட்டால் அவை கழிவறையை மிக நன்றாக சுத்தம் செய்யும் என்று எண்ண வேண்டாம். மாறாக அவை நச்சுவாயுவினை உற்பத்திசெய்யும். நச்சுவாயுவினை நுகர்ந்தால் அது உடல் நலனுக்கு நல்லதல்ல.) ஒருபோதும் மிக அதிகமான உப்புக்கரைசலைக் கொடுக்காதீர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர் கால குளியல்!!(மகளிர் பக்கம்)
Next post ஒவ்வொரு இந்தியருக்கும் ரூபாய் 15 லட்சம்!! (வீடியோ)