அனைவருக்கும் ஒரு நாளைக்கு குறைந்தது 375 ரூபாய் சம்பளம்! (உலக செய்தி)

Read Time:1 Minute, 51 Second

படிப்பு, செய்யும் வேலை, அனுபவம் என எவ்வித வேறுபாடின்றி இந்தியாவில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் குறைந்தது 375 ரூபாய் தினக் கூலியாக வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வல்லுநர் குழு ஒன்று பரிந்துரை செய்துள்ளதாக ´தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்´ செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தேசிய அளவில் தினக்கூலி உள்ளிட்ட பல்வேறு படிநிலைகளை மாற்றியமைக்கும் வகையிலான பரிந்துரைகளை தயார் செய்வதற்கான பணியை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வி.வி.கிரி நேஷனல் லேபர் இன்ஸ்டிடியூட்டிடம் ஒப்படைத்திருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்த குழுவினர், படிப்பு, செய்யும் வேலை, அனுபவம் என எவ்வித வேறுபாடின்றி இந்தியாவில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் குறைந்தது 375 ரூபாய் தினக்கூலியாக, அதாவது மாதத்திற்கு 9,750 ரூபாய் ஊதியம் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும், பணியாளர்களின் வீட்டு வாடகைக்காக வழங்கப்படும் படியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கத்தில் வரும் பிரச்னை! (அவ்வப்போது கிளாமர்)
Next post 2 படங்களில் இருந்து நடிகை நீக்கம்? (சினிமா செய்தி)