பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியர்கள் அமெரிக்காவில் போராட்டம்!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 28 Second

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் துணை ராணுவத்தினர் மீது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த கோழைத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்த இந்தியா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில், நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகம் முன் குவிந்த நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர், பாகிஸ்தானுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.

அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சிக்காகோவிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரதம் உடைந்த கதை!! (வீடியோ)
Next post அலைபேசியில் அலையும் குரல்!(அவ்வப்போது கிளாமர்)