பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 52 Second

எப்போதும் பெண்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் என்ன விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்று ஆண்களுக்கு மட்டுமே அறிவுரையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாறுதலுக்காக ஆண்களின் உளவியல் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை இது. அடிப்படையிலேயே ஆண்களுக்கு செயல்திறன் அதிகமாகவும், மொழித்திறன் குறைவாகவும் இருக்கிறது. அதனால்தான் வெளிப்படையாக ஆண்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிக்காண்பித்துக் கொள்வதில்லை. குறிப்பாக, பெண்களிடம் ஆண்கள் வெளிப்படையாகப் பேசுவதே இல்லை.

வருடக்கணக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவியிடம் கூட தன் மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் பெரும்பாலான ஆண்கள் வெளிப்படுத்துவதில்லை என்கிறார்கள் உளவியலாளர்கள். அப்படி என்னென்ன விஷயங்களை ஓர் ஆண் தன்னுடைய வாழ்க்கைத்துணையிடம் சொல்ல விரும்புகிறான் அல்லது சொல்லாமலேயே மறைக்கிறான் என்பது பற்றி உளவியல் சொல்வதைப் பார்ப்போம்…

உங்களின் அங்கீகாரம் அவனுக்கு முக்கியம்

மற்ற உறவுகளைவிட ஆண்பெண் இடையேயான உறவு நிலை பல வகையிலும், ஒருவருக்கு ஒருவர் சிறந்த ஆதரவாகத் திகழ்கிறது. உங்களுடைய ஆண் துணை உங்களுக்கு உதவிகரமாகவும், பக்கபலமாகவும் இருக்கும்பட்சத்தில் நீங்கள் அந்த உறவினுடைய உன்னதத்தை முறையாக அங்கீகாரம் செய்ய வேண்டுமென ஆண் மனம் விரும்புகிறது. இந்த உறவை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளும்பட்சத்தில், அதாவது அவனுடைய செயல்களை நீங்கள் புரிந்துகொள்ளும்போது ஆணின் சுய மதிப்பு தனக்குள்ளேயே அதிகமாகும். அவன் தன்னைத்தானே இன்னும் அதிகமாக மதிக்கத் தொடங்குவான். உங்களுக்கு மேலும் பக்கபலமாக இருப்பான்.

காயப்படுத்தும் விமர்சனத்தைத் தவிருங்கள்

பல நேரங்களில் வாழ்க்கைச்சூழல் மிகவும் கடினமானதாகி விடுகிறது. சில செயல்திட்டங்கள் ஆணுக்கு எதிர்பார்த்த பலன் தராதபோது மனதளவில் உடைந்துபோவான். அது போன்ற சூழல்களில் உங்களுடைய பாய்ஃபிரெண்ட் அல்லது கணவர் தன்னைத் தாழ்வாகக் கருதிக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. எனவே, ஓர் ஆண் இக்கட்டான சூழலில் இருக்கும்போது எந்தக் காரணத்துக்காகவும் அவனை விமர்சனம் செய்வதோ அல்லது செய்த தவறுகளை விலாவரியாக விளக்கிச் சுட்டிக்காட்டவோ செய்யாதீர்கள். அதற்கு மாறாக, நீங்களும் அவனைப் போன்று அவனுடைய இடத்தில் இருந்து யோசியுங்கள். உங்களுடைய ஆண் நண்பர் கவலைப்பட்டதற்கான காரணங்களைத் தாங்கள் புரிந்துகொண்டதை, அவருக்குத் தெரியப்படுத்துங்கள். அவன் பேச விரும்பும்போதெல்லாம் பேசுங்கள். பக்கபலமாக இருந்து உங்களால் எவ்வாறெல்லாம் உதவ முடியுமோ, அந்த வழிகளில் உதவ முயற்சி செய்யுங்கள்.

தனிமையை அனுமதியுங்கள்

நாம் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில், தனிமையை ரசிக்கத்தான் செய்கிறோம். அதற்காக, வாழ்க்கைத்துணைக்கு தனிமை சூழலை அனுபவிப்பதற்காக, சில மணி நேரங்கள் தேவைப்படுகிறது என அர்த்தம் கற்பித்து கொள்ளக்கூடாது. ஒருவருடைய தனிப்பட்ட எண்ண ஓட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைத் தரம் பிரித்து அறிந்துகொள்ள, சில மணி நேரங்கள் கண்டிப்பாக எல்லோருக்கும் தேவைப்படும். இது மனித இனத்தின் அடிப்படை ஏக்கமாக உள்ளது. ஏனெனில், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் இடையே, பணியாற்றுவதில், சில விஷயங்கள் மிகவும் சிக்கலானவையாக இருக்கின்றன. எனவே, உங்கள் கணவருக்கு எப்போதெல்லாம் தனிமை தேவைப்படுகிறதோ, அந்த நேரங்களில் அவருக்கான நேரத்தை, உலகத்தை எடுத்துக்கொள்ள தடை செய்யாதீர்கள். முழு மனதுடன் அவரது தனிமையை அனுமதியுங்கள்.

மன்னிப்பு கேட்பது லாபம் தான்

எப்போதும், எல்லோராலும் சரியான செயல்களையே மேற்கொண்டு செய்து வர முடியாது. அதற்கு ஏற்ற வகையில், குளறுபடி செய்தல் என்பது இயல்பாகவே போதுமானதாக அமைந்துவிடுகிறது. எதிர்பாராத சில நேரங்களில், நாம் செய்யக்கூடாது என்று நினைத்தாலும், சக மனிதரை வசைமாரி பொழிந்தும் மனதளவில் காயப்படுத்திவிடுகிறோம். நீங்கள் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, கொஞ்சமும் போலி தன்மை இல்லாத வகையில் மன்னிப்பு கோருங்கள். ஒரு கட்டத்தில் அவனும், தன்னுடைய செயல்களுக்கு மனம் வருந்தி, ஒளிவுமறைவு இன்றி, உண்மைதன்மையுடன் நீங்கள் மன்னிப்பு கேட்டதைப்போன்று, அவனும் போலித் தன்மை இல்லாமல் மன்னிக்க வேண்டுவான்.

சிறந்த வேலை

சமையலோ, வீடு சுத்தம் செய்வதோ, குழந்தை பராமரிப்போ எதுவாக இருந்தாலும் வீட்டு வேலைகளில் உங்களுக்கு கணவர் உதவி செய்யும்போது அதனை அங்கீகரிக்க வேண்டுமெனவும் அவன் விரும்புகிறான். பழைய நிகழ்வாக இருந்தாலும் அதை நினைவுறுத்தி நீங்கள் கொண்டாடும்போது தனக்குள் ஆண் மிகவும் மகிழ்ந்துபோகிறான். பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய சாதனைகளை மற்றவர்கள் புகழ்ந்து பாராட்டப்படுவதைக் கேட்க விரும்புகின்றனர். எனவே, ‘உங்களால் நான் பெருமிதம் கொள்கிறேன்’ என்பதைக் கூறுவதற்கு எந்த நிலையிலும் மறந்து விடக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தோற்றத்தைப் பாராட்டுங்கள்

தன்னுடைய புறத்தோற்றத்தில் அக்கறை இல்லாதவனாக, உங்களுடைய கணவன் நடந்துகொள்ளும்போது, நீங்கள் அவனை இன்னும் அதிகமாக ஈர்க்க வேண்டும் என்பது தேவையாக உள்ளது. அது மட்டுமில்லாமல், உங்களுடைய கணவர் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவராகவும், ஆண்மைத்தன்மை உடையவராகவும் உள்ளார் என்பதைத் தெரியப்படுத்துங்கள். அவ்வாறு செய்வதால், தோற்றத்தை மேம்படுத்துவதிலும், தாம்பத்ய உறவிலும் அதிகளவிலான முயற்சிகளை மேற்கொள்ள அவரை ஊக்குவிக்கும்.

நண்பர்களை அனுமதியுங்கள்

கணவருடைய வாழ்க்கையில், நீங்கள் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவனுகென்று தனிப்பட்ட நேரத்தை நண்பர்களுடன் செலவிட நினைக்கும்போது அதற்கான அனுமதியை வழங்குங்கள். தன்னுடைய குடும்ப ரீதியான, பொருளாதாரரீதியான, தொழில்ரீதியான அழுத்தங்களிலிருந்து வெளிவர அவனுக்கென்று நெருக்கமான நண்பர்கள் வட்டாரம் தேவை. அவருடைய மிகவும் நெருங்கிய நண்பர்களிடம், நீங்கள் அளவுகடந்த உரிமை எடுத்துக்கொள்ள முடியாது.

நன்றி சொல்வது நல்ல பழக்கம்

எந்தவொரு சிறு செயலாக இருந்தாலும், மனைவியாய் நன்றி சொல்ல தயங்காதீர்கள். ஏனெனில், வாழ்க்கைத் துணை என்ற இடத்தில் இருந்து, உங்களுடைய கணவர் மேற்கொள்கிற முயற்சிகளை, ஏற்றுக்கொண்டு பாராட்டு தெரிவியுங்கள். அவ்வாறு நீங்கள் தெரிவிக்கும் பாராட்டுக்கள் இரட்டிப்பாக உங்களுக்குத் திரும்ப கிடைக்கும்.

இலக்குகளை பகிர்ந்து கொள்தல்

ஆண்கள் பெரும்பாலும் தன்னுடைய வாழ்க்கை பற்றி அடிக்கடி திட்டமிட்டுக் கொண்டு இருப்பார்கள். வாழ்வில், தாங்கள் அடைய வேண்டிய இலக்குகள் மற்றும் உணர்வுகள் ஆண்களுக்கு மிகவும் முக்கியமானவை. எனவே, ஆண்கள் சொல்வதையும், அவர்களுடைய கனவுகள் பற்றியும் பேசுவதற்குப் போதுமான நேரம் ஒதுக்கும்பட்சத்தில் அதற்கான பாராட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

நீ எனது தேவை!

ஒரு பெண், ‘நீ என்னுடைய தேவையாய் இருக்கிறாய்’ என்று ஆணிடம் கூறும்போது, இந்த வார்த்தைகள் உண்மையிலேயே, அவனைப் புத்துணர்வு கொள்ள செய்யும். உங்களுக்குத் தேவையான ஆணின் மதிப்பு, அவனின் ஊக்குவிக்கும் தன்மை, ஆதரவு மற்றும் நகைச்சுவை உணர்வு போன்றவை ஓர் ஆணை மகிழ்ச்சிக்குரியவனாகவும், அன்பிற்குரியவனாகவும் வைத்திடும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

உன் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்

ஓர் ஆண் பெண்ணிடம் எதிர்பார்க்கும் வார்த்தைகளில், ‘உன் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்’ என்பவை மிகவும் சக்தி வாய்ந்தவை. இவ்வாறு, பெண் கூறுவதன்மூலம் ஆணானவன், வாழ்க்கை மற்றும் வேலைக்குத் தேவையான காரணிகளில் சரியானவற்றை உருவாக்கித் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். இது தவிர, தன் கனவுகளை, ஆசைகளை மெய்படச் செய்யும் திறமையையும் தன்னிடம் கொண்டுள்ளான். ஆண்களைப் பொறுத்தவரை, பெண்ணின் இந்த
எண்ணமானது, உண்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்!! (வீடியோ)
Next post இந்தியாவை கலக்கும் சீனாவின் கீரை!! (மருத்துவம்)