சீக்கிரம் கிளம்புங்க ஸார்…!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 6 Second

அலுவலகத்துக்குத் தாமதமாகப் போவது எவ்வளவு தவறோ, அதேபோல் அலுவலகத்திலிருந்து தாமதமாகக் கிளம்புவதும் நல்லதல்ல என்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று. ‘அலுவலகத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் என்ன சம்மந்தம்’ என்று லாஜிக்காகக் கேள்வி கேட்டால், நியாயமான பதில் ஒன்றை ஆதாரமாகக் காண்பிக்கிறது European Heart Journal.இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதயம் தொடர்பான ஆய்வு ஒன்றினைச் சமீபத்தில் மேற்கொண்டனர். பல மணி நேரம் தொடர்ந்து வேலை செய்பவர்களின் இதயம் என்னென்ன மாதிரியான மாற்றங்களுக்குள்ளாகிறது என்பதுதான் இந்த ஆய்வின் சாராம்சம். இதில் தொடர்ச்சியாக நீண்ட நேரம் பணிபுரிவர்களுக்கு சீரற்ற இதயத்துடிப்பை உண்டாக்கும் A-fibrilation ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக வார நாட்களில் வழக்கமான பணி நேரம் 35 முதல் 40 மணி நேரம். இந்த குறிப்பிட்ட நேர அளவில் செய்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 55 அல்லது அதற்கும் மேற்பட்ட மணி நேரம் வேலை செய்பவர்கள் பாதிப்புக்குள்ளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.டென்மார்க், பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 85,494 பேரிடம் இருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏறக்குறைய 40 சதவீதத்தினர் Atrial Fibrilation (A-fib) பிரச்னையில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆராய்ச்சியில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோருக்கு A-Fib பிரச்னை இருப்பதே தெரியவில்லை என்பது இன்னோர் அதிர்ச்சியூட்டும் தகவல்.

‘எனவே, திட்டமிட்டு வேலையை முடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். தேவைப்படுகிற உதவிகளை சக ஊழியர்களிடம் தயங்காமல் கேளுங்கள். எல்லாவற்றையும் நானே செய்தேன் என்ற பெருமைக்காக இழுத்துப் போட்டுக் கொண்டும் அவதிப்படாதீர்கள். பாதியிலேயே வேலைகளைக் கிடப்பில் போட்டு விட்டு சீக்கிரம் ஓடினால், அது வேலைக்கு நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்று போனஸாக அறிவுரையையும் வழங்கியிருக்கிறார்கள் ஆய்வாளர்கள்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகாரப் பரவலாக்கலும் பிரதமரும்!! (கட்டுரை)
Next post பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை !! (சினிமா செய்தி)