எல்லோருக்கும் இது எச்சரிக்கை!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 10 Second

ஊட்டியைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த வசந்தாவுக்கு 46 வயது. இவருக்கு வயிற்றில் கட்டி உருவாகி இருந்திருக்கிறது. ஆனால் பெரிய தொந்தரவுகள் எதுவும் ஆரம்ப நிலையில் இல்லாததால் சிகிச்சைக்கு செல்லாமல் கவனக்குறைவாக இருந்துவிட்டார். ஒரு கட்டத்தில் வயிறு அளவு கடந்து பெரிதாக ஆரம்பித்தபோதுதான் சுதாரித்துக் கொண்டிருக்கிறார்.

மருத்துவமனைக்குச் சென்றபோது அது புற்றுநோய்க்கட்டி என்று தெரிய வந்து அதிர்ச்சியளித்திருக்கிறது. இப்போது அந்த கட்டி அகற்றப்பட்டு, வசந்தா காப்பாற்றப்பட்டுவிட்டாலும் அனைவருக்கும் பாடமாக அமைந்துள்ளது இந்த சம்பவம். இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட இரைப்பை மற்றும் குடல் அறுவைசிகிச்சை நிபுணர் செந்தில் குமாரிடம் இதுகுறித்து பேசினோம்…

‘‘வயிற்றில் இருக்கும் கட்டியால் ஒரு கட்டத்தில் உயிருக்கு ஆபத்தான சூழல் என மருத்துவர்கள் சொன்னதால் சிகிச்சைக்குப் போவதையே அவர் நிரந்தரமாக நிறுத்தி கொண்டார். வயிறு மிகவும் பெரிதானதால் வெளியில் தலைகாட்டுவதையும் நிறுத்தி விட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்திருக்கிறார். இதனால், மேலும் பல்வேறு உடல் உபாதைகளுடன் பிரச்னை தீவிரமாகி வயிறு பெரிதாகிவிட்டது.

அதன்பிறகே, பயந்து போய் அவரது வீட்டிலிருந்தவர்கள் கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரத்தில் உள்ள எங்கள் கேட்வே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் மிகவும் ஆபத்தான நிலையிலும், நோய் தீவிர நிலையிலும் இருப்பது எங்களுக்கு தெரிந்தது. உள்ளூர அவர் கொஞ்சம் பயந்தாலும் மனதளவிலும், உடல் அளவிலும் உறுதியுடனே காணப்பட்டார். இது எங்களுக்கு உதவியாக இருந்தது. உடனடியாக வசந்தாவை பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதில் அவருக்கு கர்ப்பப்பைக்கு அருகில் உள்ள சினைப்பையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இது அதிக எடையுள்ள Heaviest ovarian வகை புற்றுநோயாகும்.

இந்தக்கட்டியினால் அவரின் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு இருந்தது. இது உயிருக்கு ஆபத்தான சூழல்தான். நாங்கள் உடனடியாக இரைப்பை மருத்துவர், இதய சிகிச்சை மருத்துவர், நுரையீரல் சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவர், மயக்க மருந்து நிபுணர், உதவியாளர்கள் என 6 பேர் கொண்ட குழுவை உருவாக்கி நேரடியான அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். கல்லீரல், பித்தப்பை, அடிவயிற்று சுவர், குடல் சுவர் போன்றவற்றில் ரத்த ஓட்டம் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. உறுப்புகளை பாதுகாக்கும் வகையில், கட்டி பிரிக்கப்பட்டு கட்டியை அகற்றி இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தோம்.

இந்த கட்டியின் அதிகபட்ச எடை 33.5 கிலோ எடையாகும். ஓவெரியன் வகை கேன்சர் கட்டியில் இதுவே பெரியதாகும். இதற்கு முன் இதுபோன்ற ஒரு அறுவைசிகிச்சையை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை செய்திருக்கிறது. அந்த கட்டியின் எடை 30 கிலோவாகும.

இந்த கட்டியை அகற்றும்போது நவீன அறுவை சிகிச்சை கருவிகளை கொண்டு சுமார் 3 மணிநேரம் சிகிச்சையை மேற்கொண்டோம். ரத்தக்கசிவு தவிர்க்கப்பட்டு பாதுகாப்பான முறையில் இந்த அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. இதனால் நோயாளி சிகிச்சை முடிந்த மறுநாளே எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார்.

விரைவிலேயே டிஸ்சார்ஜும் ஆகிவிட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படவில்லை, மேலும் ஏதாவது பிரச்னை என்றால் எங்களை அணுகச் சொல்லியிருக்கிறோம். இந்த குறிப்பிடத்தக்க அறுவை சிகிச்சை Indian book of records மற்றும் Asian book of records போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நவீன மருத்துவ வளர்ச்சி, மருத்துவர்களின் திறமை போன்றவற்றால் வசந்தா காப்பாற்றப்பட்டு தற்போது இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் மற்ற பொதுமக்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். தங்களுக்கு என்ன பிரச்னையாக இருந்தாலும் சரியான மருத்துவரை அணுகி பரிசோதித்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எத்தகைய பிரச்னையையும் ஆரம்பகட்டத்திலேயே குணப்படுத்த முடியும்’’ என்று எச்சரிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
Next post சத்துக்கள் நிறைந்த வாழைக்கிழங்கு!! (மருத்துவம்)