கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 34 Second

* இஞ்சி நீண்ட நாள் கெடாமல் இருக்க ஒரு கிண்ணத்தில் இஞ்சியை வைத்து தண்ணீர் ஊற்றி பிரிட்ஜில் வைக்கலாம். தண்ணீரை மட்டும் 2 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி வந்தால் இஞ்சி நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்.

* அரிசி, காய்கனிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் அவை நன்றாக வளரும்.

* காலி பிளவரை சமைக்கும் போது ஒரு டீஸ்பூன் பால் சேர்த்தால் அதன் வெள்ளை நிறம் மாறாமல் இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னர் சிறிதளவு உப்பை கையில் தடவினால் ஒட்டாது.

* பில்டர் காபி டிகாஷன் தயாரான உடன் அப்படியே எடுத்து கலக்காமல் சிறிது சூடாக்கி பின்னர் கலந்தால் காபி வாசனை அதிகமாக இருக்கும்.

* மாம்பழ மில்க் ஷேக் செய்யும் போது குளிர்ந்த பால் பாதியளவும், கன்டென்ஸ்டு மில்க் பாதியும் கலந்து தயாரித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

* அடை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் சோளமாவை கலந்தால் ெகட்டியாகும். சுவையும் நன்றாக இருக்கும்.உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிதளவு சேமியாவை பொடித்து போட்டால் நன்றாக இருக்கும்.

* சப்பாத்தி குருமாவில் பைனாப்பிள் துண்டுகள், திராட்சை, கிஸ்மிஸ்பழம் போன்றவைகளை சேர்த்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

* சாம்பார் பொடி செய்யும்போது சிறிதளவு சுக்கை தட்டி போட்டு கலந்து அரைக்க வேண்டும். இதனால் வாசனை கூடும். பருப்பில் உள்ள வாயுவையும் போக்கும். பாயசம் செய்யும் போதும் சிறிது சுக்கு போடலாம்.

* ரவா தோசை மொறுமொறுப்பாக வருவதற்கு ரவையை நன்றாக வறுத்து அதன் பின்னர் அரைமணி நேரம் நீரில் ஊற வைத்து மற்ற உணவு பொருட்களை சேர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இமயமலையில் ஆஞ்சநேயர் உயிருடன் உள்ளாரா? திடுக்கிடும் உண்மைகள்!! (வீடியோ)
Next post தீண்டும் இன்பம் !! (அவ்வப்போது கிளாமர்)