கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 12 Second

* மிளகாய் பொடியுடன் தயிரை குழைத்து, இட்லி அல்லது தோசைக்கு தொட்டுச் சாப்பிட்டால் புதிய சுவை கிடைக்கும்.
– எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

* சமைத்த கீரை மிச்சமாகிவிட்டால், உளுந்து மாவை அரைத்து கீரை வடை செய்து சாப்பிடலாம்.
* ரசப்பொடி கைவசம் இல்லாதபோது, மிளகு, சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம்பருப்பை சேர்த்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.
– ஆர்.கீதா, சென்னை-41

* சேனைக்கிழங்கை புளிநீரில் வேக வைத்துவிட்டால் சாப்பிடும்போது வாய் நமச்சல் இல்லாமல் இருக்கும்.
– எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

* கூட்டு, குழம்பு ஆகியவற்றிற்கு அரிசிமாவை கரைத்து விடுவதற்கு பதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்துவிட, சீக்கிரம் ஊசிப் போகாது,
சுவையாகவும் இருக்கும்.
* பக்கோடா மாவுடன் சிறிது ரவையை கலந்து செய்தால் பக்கோடா ஆறிய பிறகும் மொறு மொறுப்பாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும்.
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.

* ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி, உப்பு, மிளகாய்ப்பொடி, வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி கலந்து தாளித்துக்கொட்டிட,
சுவையான ஊறுகாய் ரெடி.
* கறிவேப்பிலை பொடி, புதினாப்பொடி கொண்டு சாதம் கலக்கும்போது சிறிதளவு எலுமிச்சைச் சாறு பிழிந்தால், புதிய கீரையில் செய்தது போல வாசனையாக இருக்கும்.
– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

* தேங்காய் எண்ணெய் கார வாசனை வராது இருக்க வெயிலில் வைத்து கல் உப்பை துணியில் கட்டி போட நன்றாக இருக்கும்.
– என்.உமாமகேஸ்வரி, நங்கநல்லூர்.

* கோதுமை தோசை சுடும்போது கோதுமை மாவுடன் ஒரு கைப்பிடி ரவை சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வார்த்தால் தோசை கிளறிக் கொள்ளாமல் பட்டு பட்டாக எடுக்க வரும்.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

* கோதுமை மாவுடன் பீட்ரூட், கேரட், பாலக் கீரை, சீரகத்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்திகளாக இட்டு, சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் சுவையான, வண்ணமயமான சப்பாத்தி தயார்.
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் சோர்வை போக்கும் வேப்பம்பூ!! (மருத்துவம்)
Next post அந்தகால மனிதர்களிடம் வழக்கத்திலிருந்த அதிரவைக்கும் அந்தரங்க உண்மைகள்! (வீடியோ)