வாத நோய்க்கு வாகை மருத்துவம்!! (மருத்துவம்)
நாட்டு மருத்துவம் பகுதியில் நம்மை சுற்றி உள்ள இயற்கையின் கொடைகளை பயன்படுத்தி பலவேறு நோய்களுக்கு எளிய மருத்துவ முறைகளை பார்த்து பயன்பெற்றும் வருகிறோம். அந்த வரிசையில் இன்று வாகை மருத்துவம் குறித்து அறிந்து பயன்பெறுவோம். பொதுவாக வாகை கோடை காலங்களில் அதிக அளவில் கிடைக்கும். மூலிகை வகையான வாகை சாலையோரங்களில் நிழல் தருவதோடு மருந்தாகவும் நமக்கு பயனளிக்கிறது. இதன் பூக்கள் வெண்மையானது. இதன் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது.
வாத நோய்க்கு அற்புத மருந்தாகிறது. கை கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை போக்கும். மேலும் உடலில் ஏற்படும் பூஞ்சை பாதிப்புகள், வீக்கம், உடல், குடல் எரிச்சல், நெஞ்சக சளி, வயிற்று கோளாறுகள், கழிச்சல், வயிற்றுவலி, வெள்ளைப்போக்கு, இப்படி ஏராளமான நோய்களுக்கு தீர்வு தருகிறது. ஆறாத புண்களை ஆற்றுகிறது. உள் உறுப்புகளுக்கு பலம் தருகிறது. குறிப்பாக தொழுநோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. நுரையீரல் கோளாறுகள், ஆஸ்துமா பிரச்னைகளுக்கும் கைகொடுக்கிறது.
பாம்பு விஷத்தை முறிக்கவல்லது. தோல் நோய்களுக்கு மேல்பூச்சாக பயன்படுகிறது. இப்படி பல்வேறு வகையிலும் பயன்தரும் வாகையை பயன்படுத்தி பலன் பெறுவோம். முதலில் வாகை இலைகளை பயன்படுத்தி வாதம், கைகால் மூட்டுகளில் வலி, வீக்கத்தை போக்கும் மருத்துவம். இதற்கு தேவையான பொருட்கள்: வாகை துளிர் இலைகள், விளக்கெண்ணெய். செய்முறை:ஒரு பாத்திரத்தில் சிறிதளவு விளக்கெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள வாகை இலைகளை போட்டு நன்கு வதக்கவும்.
சுருண்டு வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து ஆறவிடவும். இளஞ்சூடான பதத்தில் இதனை வாதம், மூட்டுவலி, வீக்கம் உள்ள இடத்தில் மேல் பற்றாக வைத்து கட்டவும். இப்படி தொடர்ந்து செய்து வர வாதம் கை,கால் மூட்டு வீக்கம், வலி நீங்கும். இந்த முறையில் யானைக்கால் மற்றம் விரை வீக்கத்துக்கும் தொடர்ந்து மருத்துவம் செய்து வர இப்பிரச்னைகளும் நீங்கும்.
வாகை பூக்களை பயன்படுத்தி கழிச்சல், வயிற்றுவலி, வெள்ளைபோக்கு, மற்றும் நுரையீரல் கோளாறுகளுக்கும் ஆஸ்துமாவிற்கும் மருத்துவம் செய்யும் முறை குறித்து அறிந்து கொள்வோம். இதற்கு தேவையான பொருட்கள்: வாகை பூக்கள், மொட்டுகள், தேன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கொதிக்கும் போது அதில் சுத்தம் செய்து வைத்துள்ள வாகை பூக்கள் மற்றும் மொட்டுகளை போட்டு கொதிக்க விடவும். மென்மையான பதம் வந்ததும் வடிகட்டி இளஞ்சூட்டில் தேன் கலந்து தொடர்ந்து பருகி வர மேற் சொன்ன பிரச்னைகள் நீங்கும்.
இந்த தேனீர் தொழுநோய்க்கும் அற்புத மருந்தாகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். வாகை விதைகள் வீக்கத்தை கரைக்கும் தன்மை கொண்டது. இலைகள் தோல் நோய்களுக்கு மேல்பற்றாக போடும்போது தீர்வாக அமைகிறது. இதன் விதை மற்றும் ெமாட்டுகளை பயன்படுத்தி ஆறாத புண்களை ஆற்றும் மருத்துவம். இதற்கு தேவையான பொருட்கள்: தேங்காய்எண்ணெய், வாகை மரத்தின் காய் மற்றும் மொட்டுகள். காய்களை உடைத்தால் அதனுள் உள்ள விதைகளை மட்டும் எடுத்து பயன்படுத்தவும்.
ெசய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சிறிது ஊற்றி சூடானதும் அதனுடன் வாகை மொட்டுகள் விதைகளை சேர்த்து தைலப்பதம் வரை காய்ச்சி இறக்கி ஆறவைத்து வடிகட்டி பயன்படுத்தவும். இதனை நாட்பட்ட புண்கள்மீது பூசி வர வெகுவிரைவில் குணமாகும். வீக்கம் வற்றும். உடல் எரிச்சல் உள்ள நேரங்களில் குறிப்பாக கோடை காலத்தில் நுங்கை நசுக்கி எரிச்சல் உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வர எரிச்சல் நீங்கும். தோலில் வெயிலால் ஏற்படும் கருமையும் நீங்கும். இளநீர் மற்றும் நுங்கு உடல் உஷ்ணத்தை தணிக்கவல்லது.
Average Rating