அல்சரை குணப்படுத்தும் விளாம்பழம்!! (மருத்துவம்)
நமக்கு எளிதாக கிடைக்க கூடிய மூலிகை பொருட்கள், கடை தெருவிலே கிடைக்கின்ற பொருட்கள் மற்றும் இல்லத்திலே இருக்கின்ற மளிகை பொருட்களை பயன்படுத்தி பக்கவிளைவில்லா இயற்கை மருந்து தயாரிப்பது மற்றும் அதன் மருத்துவ குணங்களை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மிகுந்த சத்துக்கள் நிறைந்த விளாம்பழம் பற்றி பார்க்கலாம். ‘வுட் ஆப்பிள்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விளாம்பழத்தில் புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன. இந்த விளாம்பழம் மற்றும் அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணங்கள் உள்ளன. விளாங்காயில் பி2 உயிர்சத்தும் உள்ளது. இத்தகைய மகத்துவமுள்ள விளாம்பழத்தை பயன்படுத்தி குளிர்ச்சி தரும் தேநீர் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: விளாம்பழம், நாட்டு சர்க்கரை. பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் விளாம்பழம் மற்றும் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து நீர் விட்டு கொதிக்கவிடவும். இந்த வடிகட்டிய தேநீரை பருகி வருவதால் உடல் சோர்வு, பித்த வாந்தி, மயக்கம் ஆகியவற்றை சரிசெய்கிறது. உடலுக்கு பலம் தருவதோடு குளிர்ச்சியடைய செய்கிறது. இந்த தேநீரை சூடாகவோ அல்லது குளிர்ந்த நீராகவோ அருந்துவதால் உடலில் பித்த அளவை சமன் செய்யலாம். ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாகிறது.
வாய் துர்நாற்றத்தை போக்கும் தேநீர் தயாரிக்கலாம். தேவை
யான பொருட்கள்: விளா மர இலை, மிளகு, ஓமம், பெருங்காயப்பொடி, உப்பு.
விளாம் மரத்தின் இலையை கழுவி கசக்கி கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கசக்கிய இலை, 5-10 மிளகு, சிறிது பெருங்காயப்பொடி, ஓமம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதனை தினமும் அருந்துவதால் அல்சர், குடல் புண் ஆகியவற்றால் ஏற்படும் வாய் துர்நாற்றம், வயிற்று புண், பல்வலி, ஈறுகளில் வீக்கம், ஈறுகளில் ரத்த கசிவு ஆகியன நீங்கும்.
விளாங்காயை பயன்படுத்தி செரிமானத்தை தூண்டும் உணவு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாங்காய், நாட்டு சர்க்கரை, வரமிளகாய், புளி, நெய், உப்பு. பாத்திரத்தில் நெய் விட்டு உருகியதும், ஓடு நீக்கிய விளங்காய், வரமிளகாய், புளி சேர்த்து வதக்கவும். இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து துவையல் பதத்தில் அரைத்து எடுக்கவும். அனைத்து சுவையும் அடங்கியுள்ள இந்த துவையலை, தோசை, இட்லி உள்ளிட்ட உணவு பொருட்களுடன் எடுத்து வருவதால், வாயுவை வெளித்தள்ளுகிறது. வயிறு பொருமல், உப்பசம் உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்கிறது.
விளாம்பழ ஓடு, வில்வம் பழம் ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்தினால் தோல்நோய் பிரச்னையிலிருந்து விடுபடலாம். விளாம்பழம் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது. சிறுவர்களுக்கு தினமும் சாப்பிட கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. பசியை தூண்ட செய்து ஜீரண கோளாறுகளை சீர்செய்கிறது. இது ரத்தத்தை விருத்தி ஆக்குவதுடன், இதயத்தை பலம் பெற செய்கிறது. விளாம் பழத்தை அரைத்து முகத்தில் பூசிவர, வெயில் காலத்தில் இழந்த பொலிவு மீண்டும் வரும். செம்பருத்தி இலையுடன், விளாம்மர இலையினை அரைத்து தேய்ப்பதால் முடி பட்டுபோன்ற மென்மையுடன் இருக்கும். விளாம் காயை தயிருடன் பச்சடி செய்து சாப்பிட்டு வர அல்சர் முழுமையாக குணமடையும்.
Average Rating