பாடி வேக்ஸிங் : ப்யூட்டி பாக்ஸ்!! ( மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 22 Second

நமது உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை மெழுகால் எடுக்கும் முறையே வேக்ஸிங். அதாவது வேக்ஸிங் என்றால் மெழுகு. வேக்ஸிங் பார்ப்பதற்கு மிகவும் திக்கா இருக்கும். சூடேற்றும்போது உருகத் துவங்கும். மெழுகு சூடேறினால் எப்படி உருகுகிறதோ அதுபோலவே வேக்ஸிங் சூடேற்றும் நிலையில் உருகத் துவங்கும்.அழகுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்தவர்கள் எகிப்தியர்கள் என்றால் மிகையாகாது. கிளியோ பாட்ரா அதற்கொரு சான்று. முதன் முதலில் வாக்ஸினை எகிப்தியர்கள்தான் ஆரம்பித்தார்கள்.
எகிப்திய ராணிகளும், இளவரசிகளும் தங்கள் அழகை வெளிப்படுத்தும் விதமாக வேக்ஸினை துவங்கினார்கள். அந்தக்கால எகிப்திய பெண்கள் வேக்ஸினாக மெழுகு, சொரசொரப்புத் தன்மை கொண்ட கல், அடர்த்தியான நார் கொண்டு தோலில் தேய்த்து, இறந்த செல்களை நீக்குவர். அப்போது சருமத்தில் உள்ள முடிகள் தானாகவே கீழே விழுந்துவிடும். நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்கள் பெரும்பாலும் எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவையே.

கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், மாடலிங் துறையில் உள்ளவர்கள், தொலைக்காட்சிப் பிரபலங்கள், சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள், செலிபிரேட்டிகள் அதிகம் உடல் முழுவதையும் வேக்ஸின் செய்து தேவையற்ற ரோமங்களை நீக்கிவிடுகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் இவற்றைப் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. இவர்கள் பெரும்பாலும் குளிக்கும் மஞ்சள், எளிதில் கிடைக்கும் மூலிகைப் பொருட்கள் இவற்றைப் பயன்படுத்தியே தோலில் உள்ள ரோமத்தின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்துவர்.சில பெண்கள் ப்ளேடு, ரேஷர் கொண்டு முடியினை நீக்குவார்கள். அவ்வாறு செய்யும்போது மேலிருக்கும் முடி எளிதில் வந்துவிடும். சருமத்திற்குள் உள்ளிருக்கும் முடி அப்படியேதான் இருக்கும். அது சருமத்திற்கு சொரசொரப்புத் தன்மையினை தரத் துவங்கும். ஒவ்வொரு முடியாக ப்ளக் பண்ணி எடுக்கும்போது சருமத்தில் வலி தோன்றும். வேக்ஸின் செய்யும்போது மட்டுமே நிமிடத்திற்குள் முடி நீங்கி அழகான, பொலிவான தோற்றம் தோலிற்கு கிடைக்கிறது.

வேக்ஸினை சூடேற்றி உருக வைத்த நிலையில், சருமத்தில் தடவி ஸ்டிரிப் கொண்டு அதன் மேல் ஒட்டி நீக்கும் முறையை வேக்ஸினாக அழகு நிலையங்களில் செய்யப்படுகிறது. மாத்திரை வடிவிலான வேக்ஸின்களும் சந்தைகளில் கிடைக்கிறது. அதும் உருகும் தன்மை கொண்டதே. சில வகை வாக்ஸின்கள் தோலில் ஒட்டாமல் முடியில் மட்டும் ஒட்டிக்கொண்டு இழுத்துக் கொண்டு வரும்.உடலில் இருக்கும் ரோமங்களை நீக்குவது அழகு சார்ந்த விசயமே. முடி இல்லாத கைகளும், கால்களும் பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாக வழுவழுப்பான தன்மையில் மென்மை தன்மை கொண்ட தோலாக தோற்றம் கொடுக்கும். கூடுதல் பொலிவு சருமத்திற்கு கிடைக்கும். ஒருவித குளிர்ச்சித் தன்மை சருமத்திற்கு கிடைத்துவிடும். சில வகையான வேக்ஸின்கள் சருமத்தின் நிறத்தை மாற்றிக்காட்டும் தன்மை கொண்டது.

முக்கியமாக முகத்தைப் பொறுத்தவரை வேக்ஸின் பண்ணாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் ஸ்டிரிப் கொண்டு சருமத்தை வேகமாக பிடித்திழுக்கும்போது, முகத்தில் இருக்கும் சருமத்தில் தேவையற்ற பாதிப்புகள் நேரலாம். வெளிநாட்டவர்கள் மட்டுமே உடலோடு அவர்களது முகத்தையும் சேர்த்து வேக்ஸின் செய்து கொள்கிறார்கள். ஆனால் இந்தியப் பெண்களும் ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் வாழும் பெண்களும் த்ரெட்டிங் முறையில் முடிகளை நீக்கும் முறையையே விரும்புகிறார்கள். ஏனென்றால் புருவத்தை வாக்ஸ் செய்தால் எதிர்பார்க்கும் வடிவம் கிடைக்காது. த்ரெட்டிங்கில் மட்டுமே விரும்பிய வடிவத்தைக் கொண்டுவர முடியும். உதட்டின் மேல் கீழ் பகுதிகள், கன்னம், தாடை போன்ற பகுதிகளை வேக்ஸ் செய்வதைவிட த்ரெட்டிங் செய்வதையே இந்தியப் பெண்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். அதுவே சிறந்தது.முகம் தவிர்த்து கை, கால், தொடை, வயிறு, முதுகு, இடுப்பு, அன்டர் ஆர்ம்ஸ், பிறப்புறுப்புகள் இவற்றில் தேவையற்ற முடிகள் இருந்தால் அதை வேக்ஸின் செய்து எடுக்கலாம்.

தற்போது அழகு நிலையங்களில் நான்கு வகையான வேக்ஸின்கள் டிரெண்டிங்கில் உள்ளது…
1. கோல்ட்(cold) வேக்ஸ்
2. ஹாட்(hot) வேக்ஸ்
3. ஸாஃப்ட்(soft) வேக்ஸ்
4. ஹார்ட்(hard) வேக்ஸ்

கோல்ட்(cold) வேக்ஸ்

இது உருகிய நிலையிலேயே இருக்கும். சற்றே திக்கான ஆனால், லிக்யூட் வடிவில் காணப்படும். இதனை சருமத்தில் தடவியதும், ஸ்டிக்கர் டைப்பில் ஒட்டி எடுப்பதுபோல் வரும் ஸ்டிரிப் கொண்டு வேக்ஸ் மேல் வைத்து ஒட்டி எடுக்க வேண்டும். ஒரே முறையில் அனைத்து முடியும் நீங்கி விடும். இதில் வலி என்பது குறைவாகவே இருக்கும்.

ஹாட்(hot) வேக்ஸ்

இது க்ரீம் வடிவில் இருக்கும். வாக்ஸின் ஹீட்டரில் இந்தக் க்ரீமை நிறப்பி ஹீட் செய்து ஐஸ் குச்சி வடிவில் இருக்கும் சிப் கொண்டு எடுத்து தடவும் முறை. இதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தடவி முடிகளை நீக்குதல் வேண்டும்.

ஸாஃப்ட்(soft) வேக்ஸ்

கோல்ட் வேக்ஸ் மாதிரியான ஒரு ஃபீல் இந்த வேக்ஸில் இருக்காது. இது செமி சாலிட் வடிவில் இருக்கும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த வேக்ஸை ஹீட் பண்ணி கையில் அப்ளை பண்ணிவிட்டு, காடா துணியை வைத்து தேய்த்து இழுப்பார்கள். முடி மொத்தமும் துணியில் ஒட்டிக் கொள்ளும். இப்போது பேப்பர் வடிவிலான ஸ்டிப் பயன்பாட்டில் உள்ளது.

ஹார்ட்(hard) வேக்ஸ்

ஹார்ட் வேக்ஸை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. துணியோ ஸ்டிரிப்போ இதற்குத் தேவையில்லை. ஹார்ட் வேக்ஸினை சிறிது எடுத்து ஹீட் செய்து கையில் தடவி ஆறியதும் திக்கான நிலைக்கு மாறும். பிறகு விரலால் உறித்து எடுத்தல் வேண்டும். மற்ற வேக்ஸைவிட இதில் வலி சற்று குறைவாக இருக்கும். மென்மையான சருமம் கொண்ட பிறப்புறுப்பு பகுதிகளில் இதை பயன்படுத்தலாம். பெரும்பாலும் அழகு நிலையங்களில் ஹீட் செய்து பயன்படுத்தும் வேக்ஸ் களையே அழகுக்கலை நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள். சருமத்தின் தன்மைக்கு ஏற்ப நிறைய வகைகள் உள்ளது. அதாவது வறண்ட சருமம், சென்சிட்டிவான சருமம், எண்ணைத் தன்மை கொண்ட சருமத்திற்கு ஏற்ப சுகர் வேக்ஸ், சாக்லெட் வேக்ஸ், க்ரீன் ஆப்பிள் வேக்ஸ், ஸ்ட்ராபெர்ரி வேக்ஸ், ரோஸ் வேக்ஸ், பியர்ல் வேக்ஸ், கோல்ட் வேக்ஸ், ஆலுவேரா வேக்ஸ் என நிறைய ப்ளேவர்ட் வேக்ஸ்கள் சந்தைகளில் கிடைக்கிறது. சிலவகை வேக்ஸ்களில் சருமத்திற்கு பொலிவும் பளபளப்பும் கூடுதலாகக் கிடைக்கும். உங்கள் சருமத்திற்கு எது ஏற்றதோ, எது தேவையோ அந்த வேக்ஸை அழகுக்கலை நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ப்ளேவர்ட் வேக்ஸில் சிலவகை மட்டுமே சருமத்தில் ஒட்டும் தன்மை கொண்டது. வேக்ஸை தடவுவதற்கு முன்பாக சருமத்தில் ஜெல் அப்ளை செய்த பிறகே ப்ளேவர்ட் வேக்ஸை அப்ளை செய்வார்கள். சினிமா நட்சத்திரங்களும், செலிபிரேட்டி களும் தங்கள் உடல் முழுவதையும் வேக்ஸின் செய்து கொள்வார்கள். திருமணம் முடிவான மணமகள், விழாக்கள், நிகழ்ச்சி களில் கலந்துகொள்ள செல்லும் பெண்கள், ஸ்வீவ்லெஸ் மற்றும் ஷார்ட்டான ஸ்லீவ்ஸ் உள்ள டாப்ஸ் அணியும் பெண்கள், மினி ஸ்கெட்டை விரும்பி அணியும் பெண்கள் பாடி வேக்ஸினை எடுத்துக் கொள்கிறார்கள். புடவை, சுடிதார் போன்ற உடலை முற்றிலும் மறைக்கும் உடை அணியும் பெண்கள், வெளியே தெரியும் உறுப்பான கைகளில் மட்டும் வேக்ஸின் செய்கிறார்கள்.

வேக்ஸினால் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

* பிளேடினாலே, ரேஷர் மூலமாகவோ செய்யும்போது கீறல், ரத்தம் வர வாய்ப்பு அதிகம் உண்டு.
* சரும வியாதிகள் வர வாய்ப்புள்ளது.
* முடியுடன் இறந்த செல்களையும் இணைத்தே நீக்கும்.
* பக்க விளைவுகள் இல்லை.
* ஒரே சிட்டிங்கில் அனைத்து முடிகளும் வந்துவிடும்.
* அரை மணி நேரத்திற்குள் எளிமையாக முடிக்கலாம்.

வேக்ஸினால் செய்வதால் ஏற்படும் தீமைகள்

* வலி இருக்கும். ஒரு சிலருக்கு மட்டுமே வலி கூடுதலாக தெரியும்.
* சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு, ரேஷஸ் வர வாய்ப்புள்ளது.
* சருமம் தடிக்கவும், சிவக்கவும் வாய்ப்புள்ளது. சற்று நேரத்தில் சரியாகும்.

நீண்ட இடைவெளிவிட்டு நன்றாக முடி வளர்ந்து வெளியில் தெரியத் துவங்கியதும் வேக்ஸின் செய்வதே மிகவும் நல்லது. ஒருவரது முடியின் வளர்ச்சி அதிக பட்சம் 20 முதல் 30 நாள் இடைவெளியில் மீண்டும் தெரியத் துவங்கும். ஒரு முறை வேக்ஸ் செய்த பிறகு அடுத்த முறை வேக்ஸ் செய்யும் இடைவெளி என்பது 6 வார காலம் தேவைப்படும். அடிக்கடி வேக்ஸின் செய்வதால் முடி உள்நோக்கி சதைக்குள் வளரும் வாய்ப்பு அதிகம் உண்டு. அது பார்க்கும்போதே கண்களுக்குத் தெரிந்தாலும், சதைக்குள்ளே வளர்வதால் முடியினை நம்மால் நீக்க முடியாமல் போகும்.

வேக்ஸின் செய்த பிறகு சருமத்தில் திறந்திருக்கும் துளைகளை லோஷன், ஐஸ் க்யூப், கற்பூரத் தண்ணி கொண்டு மூடல் வேண்டும். கற்பூரத் தண்ணியால் உடலுக்கு கூடுதலாக குளிர்ச்சித் தன்மை கிடைக்கும். சில வகையான வேக்ஸ் சருமத்தின் மெல்லிய தோலை உரித்துக்கொண்டு வரும். அது உடனே நம் கண்களுக்குத் தெரியாது. ப்ளேவர்ட் வேக்ஸில் மட்டுமே இந்த விளைவு பெரும்பாலும் நிகழும். மிகவும் கவனமாக தெரிந்தவர்களைக் கொண்டு செய்வதே நல்லது. அல்லது அழகு நிலையங்களை அணுகலாம். செய்யும் முறை தெரியாமல் நாமாக செய்ய முற்படும்போது சருமத்திற்கு தேவையற்ற பக்க விளைவுகள், பாதிப்புகள் நிகழ வாய்ப்பு அதிகம் உள்ளது.வேக்ஸினை கட்டாயம் குளிரூட்டப்பட்ட அறையிலேயே செய்தல் வேண்டும். நமது உடலின் சூடு மற்றும் வேக்ஸின் சூடு இணையும்போது சருமம் வியர்க்கத் துவங்கும். வியர்க்கும் நிலையில் வேக்ஸின் சருமத்தோடு ஒட்டாது. ஒட்டாத நிலையில் தோலில் இருக்கும் முடி வராது.

அடுத்த இதழில்…
படங்களுடன் பார்லரில் வேக்ஸின் செயல்முறை…
எழுத்து வடிவம்: மகேஸ்வரி

வாசகர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு இதழ் முகவரிக்கு ‘ப்யூட்டி பாக்ஸ்’ என்னும் பெயரில் கேள்விகளை அனுப்பினால் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா தங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிறிஸ்டோபர் நோலன் – ஒரு லெஜன்ட் இயக்குநர் !! (வீடியோ)
Next post ஆசைக்கு அடுத்த நிலை!! (அவ்வப்போது கிளாமர்)