ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ்செல்வன்

Read Time:2 Minute, 5 Second

LTTE.SP.tamil1.jpgeuro.jpg
புலிகளை தடைசெய்வது தொடர்பான ஐரோப்பிய யூனியனின் போக்குகள், அமைதி நடவடிக்கைகளை மோசமான நிலைக்கே தள்ளுவதாக அமையுமென புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வன் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்துக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சமாதானத்தின்மீது கொண்டுள்ள நம்பிக்கையினை ஐரோப்பிய யூனியனின் இவ்வகையான நடவடிக்கைகள் மிகவும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளிவிடும். ஐரோப்பிய யூனியனின் இந்நடவடிக்கை தென்பகுதியிலுள்ள சிங்கள கடும்போக்காளர்களை திருப்தி படுத்துவதாக மாத்திரமே அமையும்.

ஐரோப்பிய யூனியனின் தடை நடவடிக்கைகள் எந்தத் தாக்கத்தையும் எமக்கு ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் எமக்கு சொத்துக்கள் இல்லை. எமது பகுதியில் வரி அமைப்பு ஊடாகவும், உள்ளுர் வர்த்தக நிறுவனங்களுடாகவும் நிதியைப் பெறக்கூடியதாக உள்ளது.

எமது கட்டுப்பாட்டில் சுமார் ஐந்துலட்சம் முதல் ஆறுலட்சம் பேர் வரையிலானோர் தம் வெளிநாட்டு உறவினர்களிடமிருந்து உதவிகளை பெறுகின்றனர். சர்வதேச சமூகம் ஒரு தலைப்பட்சமாக தீர்மானங்களை எடுத்தால் தமிழ்மக்கள் சுயமாக இறுதித்தீர்மானம் எடுப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை.

கொடூரமான படையினருக்கெதிரான யுத்தம் புரிவதற்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். என்று தமிழ்செல்வன் தனது பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் மீதான தடையை ,ந்தியா நீடிப்பு
Next post வடக்கு கிழக்கு மக்களை பிரபாகரன் கும்பலின் கொடூரப்பிடியிலிருந்து மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் -‘ரிஎம்விபி”யின் இராணுவத்தளபதி மார்க்கன்