மறுமண அழைப்பிதழை திருப்பதியில் வைத்த ரஜினி மனைவி, மகள்! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 43 Second

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். சமீபத்தில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தொழில்அதிபரின் மகனை சவுந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார். எளிமையான முறையில் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

சவுந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். இவர்களுடன், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 20 பேர் சென்றனர். திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர்கள் இரவு தங்கி ஓய்வு எடுத்தனர்.

நேற்று காலை சிறப்பு தரிசனத்தில் சுவாமி ஏழுமலையானை, சவுந்தர்யா, லதா தரிசனம் செய்தனர்.

திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்து பின்னர் பெற்றுக் கொண்டனர். லதா ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்குத் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய ரூபாய் மதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியல்…!! (வீடியோ)
Next post அம்பானி மகள் பற்றி தெரியுமா? (வீடியோ)