உறவினரின் DNA மூலம் சிக்கியருக்கு மரண தண்டனை!! (உலக செய்தி )
சீனாவில் 1988 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே 11 சிறுமிகள் மற்றும் பெண்களை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 53 வயது நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீன ஊடகங்களால், ´ஜேக், தி ரிப்பர்´ (Jack the Ripper) என்று அழைக்கப்பட்ட காவோ செங்கியாங் கொலை செய்யும் முன்பு சிறுமிகள் மற்றும் பெண்களை பின்தொடர்ந்து சென்று அவர்களிடம் வழிப்பறி செய்வது மட்டுமல்லாது அவர்களை பாலியல் வல்லுறவுக்கு செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கொலை செய்த பின்னர் அவர்களின் தொண்டைப்பகுதியில் வெட்டியதுடன், இறந்த உடல்களையும் சிதைத்துள்ளார்.
கன்சூ மாகாணத்தில் உள்ள பய்யின் எனும் இடத்தில் அவர் நடத்திவந்த மளிகைக் கடையில் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து பலரிடமும் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொண்ட பின்னரே காவல்துறையினரால் இவரைக் கைது செய்ய முடிந்தது.
இவர் 2002 ஆம் ஆண்டே கொலைகள் செய்வதை நிறுத்திக்கொண்டாலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு இவரது உறவினர் வேறொரு சிறு குற்றத்துக்கு கைதான பின்னரே இவரைப் பற்றிய துப்புக் கிடைத்தது.
கைது செய்யப்பட்ட நபரின் டி.என்.ஏ மாதிரி காவல்துறையிடம் ஏற்கனவே இருந்த டி.என்.ஏ மாதிரியுடன் ஒத்துப்போனது. அதை வைத்து கைது செய்யட்ட நபரின் உறவினர் ஒருவர்தான் தொடர் கொலைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும் என காவல் துறையினர் காவோ செங்கியாங்கை நெருங்கினர்.
அவரது மகன் பிறந்த 1988 ஆம் ஆண்டில் காவோ தனது முதல் கொலையை செய்துள்ளார்.
அப்போது 23 வயதாகும் பெண் ஒருவரின் உடல் 26 கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
கொல்லப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்பு உறுப்புகளையும் அவர் வெட்டி எடுத்ததாக பெய்ஜிங் யூத் டெய்லி எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரால் கொல்லப்பட்டவர்களிலேயே மிகவும் இளம் வயதுடைய சிறுமியின் வயது எட்டு. இவரது தொடர் கொலைகளுக்கு பிறகு பய்யின் நகரத் தெருக்களில் தனியாக நடப்பதைப் பெண்கள் தவிர்த்தனர்.
பெரும்பாலும் துப்பாக்கியால் சுட்டு அல்லது நச்சை ஊசி மூலம் செலுத்தியே சீனாவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டாலும், வியாழனன்று காவோவுக்கு மரண தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating