சுகப்பிரசவம் எளிதுதான்!சானியா மிர்சா பர்சனல் டிப்ஸ்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 58 Second


டென்னிஸ் உலகின் இளவரசி சானியா மிர்சா, அவரது ஆட்டத்தைப் போலவே அதிரடியாக கல்யாணம் செய்துகொண்டு செட்டிலானார். கர்ப்பமாக இருப்பதை பெருமையோடு வலைதளங்களிலும் புகைப்படங்களாக பகிர்ந்து வந்தார்.

சமீபத்தில் இஷான் என்கிற ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் உள்ள சானியா, தன்னுடைய பிரசவகால அனுபவங்களைக் கூறியிருக்கிறார். வருங்கால கர்ப்பிணிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இது பயன்படும் என்ற முன்னுரையோடு குறிப்பிட்டிருக்கும் அவரது ஆலோசனைகள் இவை…

‘‘என்னுடைய 12 வயது முதல் டென்னிஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். டென்னிஸ் பயிற்சி மேற்கொள்ளும் நேரம் அல்லது பயிற்சி மேற்கொள்ளாத நேரங்களுக்கு ஏற்றவாறு என்னுடைய உணவு முறைகளை எடுத்துக்கொள்வேன். பயிற்சி நேரங்களில் அதிக ஆற்றல் தேவைப்படுவதால் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவேன்.

பயிற்சிகள் செய்யாத ஓய்வு நேரங்களில் பருப்பு, அரிசி அடங்கிய உணவுகளை எடுத்துக்கொள்வேன். துரித வகை உணவுகள், ஆரோக்கியமற்ற பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்து இயற்கை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறேன். எனது பிரசவம் எளிதாகவும், சுமுகமாகவும் இருந்ததோடு அதன் மூலம் கிடைத்த அனுபவம் மிக சிறப்பாக இருந்தது. பெண்கள் தங்கள் வலிமையை குறைத்து மதிப்பீடு செய்து வைத்துள்ளனர். பெண்மையின் வலிமை என்ன என்று பிரசவத்தின்போது நான் உணர்ந்து கொண்டேன்.

கர்ப்ப காலத்திலும் என்னுடைய உடல் தகுதியை பராமரித்தேன். அப்போதும் டென்னிஸ் விளையாடினேன். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் யோகா பயிற்சி செய்தேன். தினமும் மூன்று முதல் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டேன். உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய பயிற்சிகளை செய்தேன்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் மிக சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். அது சற்று சிரமமான காரியமாக இருந்தாலும், பெண்கள் உடல் தகுதிக்காக அதை செய்துதான் ஆக வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நலமும், மனநலமும் மிகவும் அவசியம்.

குழந்தை பிறந்துவிட்டது. இனி மீண்டும் எப்போது விளையாட வருவேன் என்று இப்போதைக்கு சொல்வதற்கில்லை. என்னுடைய முதல் இலக்கு உடல் தகுதியை மீட்டெடுப்பது. பிரசவத்திற்கு பின் நமது சகஜ வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சிறிது காலம் தேவைப்படதான் செய்யும். எனவே, 2020 ஒலிம்பிக்கை எனது இலக்காக நிர்ணயித்துள்ளேன். நான் விளையாட்டில் இருந்து, ஓய்வெடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் நான் என்னை டென்னிஸ் விளையாட பிறந்தவளாகத்தான் கருதுகிறேன்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுனாமி விடியோ நாசா வெளியிடு மாதிரி!! ( வீடியோ)
Next post உறவினரின் DNA மூலம் சிக்கியருக்கு மரண தண்டனை!! (உலக செய்தி )