புத்தாண்டு பரிசாக 23 பொருட்களின் விலை குறைப்பு!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 45 Second

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதத்தில் பல்வேறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி சினிமா டிக்கெட் கட்டணம், தொலைக்காட்சி, கணணி திரை, பவர் பேங்க் உள்பட 23 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது.

அதிகபட்சமாக விதிக்கப்படும் 28 சதவீத வரி விகிதத்துக்குள் ஆடம்பர பொருட்கள், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள், சிமெண்ட், பெரிய திரையுடன் கூடிய தொலைக்காட்சி பெட்டி, ஏ.சி., பாத்திரம் கழுவும் இயந்திரம் ஆகியவை மட்டும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. டிஜிட்டல் கேமரா, வீடியோ கேமரா ரெக்கார்டர், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளின் வாகன பொருட்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சரக்கு வாகன 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.

ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100-க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

32 அங்குலம் வரை கொண்ட டி.வி. பெட்டி, கணணி திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இந்த வரி சீரமைப்பு குறித்த ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவை நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அளிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இன்று முதல் மேற்கண்ட 23 வகையான பொருட்கள் விலை குறைப்பு அமலுக்கு வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாரத்தான் போட்டியில் நடிகை !!
Next post உலகிலேயே மிகவும் ஆபத்தான 3 சாலைகள்!! (வீடியோ)