அனுமான் முஸ்லிமா? – பா.ஜ.க. விளக்கம் அளிக்க வலியுறுத்தல் !! (உலக செய்தி)

Read Time:2 Minute, 51 Second

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும் கூட.

இந்தியாவில் வடக்கு முதல் தெற்குவரை கிழக்கு முதல் மேற்குவரை அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்க அனுமார் பாடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து, அம்மாநில மத விவகாரங்கள்துறை மந்திரி லக்‌ஷ்மி நாராயண் சவுத்ரி அனுமான் ஜாட் வம்சத்தை சேர்ந்தவர். அதனால் தான் அவர் மற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சகித்துகொள்ள முடியாமல் ராமனுக்கு ஆதரவாக நின்றார் என குறிப்பிட்டார்.

இதற்கும் மேலே ஒருபடி ஏறிச்சென்ற உ.பி. சட்டமன்ற மேல்சபை பா.ஜ.க. உறுப்பினர் புக்கல் நவாப் அனுமான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ரஹ்மான், அர்மான், குர்பான் என்ற ஒலிவடிவத்தில் அனுமானின் பெயரும் அமைந்திருப்பதால் அவர் முஸ்லிம்தான் என்று அவருக்கு தெரிந்த ஆதாரத்தை அவர் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், ஆளுக்கொரு மாதிரியாக அனுமானை உரிமை கொண்டாடும் வகையில் இதுதொடர்பாக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன? என மதுரா ஜீயர் அதோக்‌ஷாஜானந்த் டியோ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருபுறம் காலத்துக்கு தக்கவாறு ராமர் கோவில் பிரச்சனையை பா.ஜ.க. கையாண்டு வருகிறது, இன்னொருபுறம், மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தலைவர்கள் இந்து கடவுள்களைப் பற்றி தகாத கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற மேல்சபை பா.ஜ.க. உறுப்பினர் புக்கல் நவாப் கூறிய கருத்து பா.ஜ.க. ஆமோதித்தால் பின்னர் அக்கட்சி அனுமானுக்கு ஒரு மசூதி கட்டித்தர வேண்டி இருக்கும் என்றும் அதோக்‌ஷாஜானந்த் டியோ காட்டமாக குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனிது இனிது காமம் இனிது!(அவ்வப்போது கிளாமர்)
Next post உதடு முத்த காட்சியில் நடித்த நடிகை! (சினிமா செய்தி)