பிரச்னை பொதுவானது… காரணங்கள் தனியானது! ( மருத்துவம்)

Read Time:10 Minute, 57 Second

இப்போதெல்லாம் முடி கொட்டாதவர்களை பார்ப்பது மிக அரிது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் முடிகொட்டுவது பொதுவான பிரச்னையாக இருந்தாலும், காரணம் வேறுபடும். இந்த வாரம் பெண்களுக்கு முடி கொட்டுவதற்கான முக்கிய காரணங்களைப் பற்றிப் பார்ப்போம்…

பெண்களின் முடி உதிர்வுக்கு காரணம் Telogen Effluvium. இவ்வகை முடி உதிர்வு திடீரென்று மெதுவாக ஆரம்பித்து, போகப்போக நிறைய முடிகள் கடகடவென்று கொட்டத் தொடங்கி, பின்னர் தானாக நின்றுவிடும். பொதுவாக இது கடுமையான காய்ச்சல், பெரிய அறுவை சிகிச்சை, அதிகமான ரத்தப்போக்கு, பிரசவம், மன உளைச்சல், நாள்பட்ட நோய்கள், பெரிய விபத்து மற்றும் Crash Diet போன்றவைகளால் ஏற்படலாம்.

காய்ச்சல் வந்தவுடனேயோ அல்லது அறுவை சிகிச்சை செய்த உடனேயோ கொட்டாமல், 2, 3 மாதங்கள் கழித்துத்தான் முடி கொட்ட ஆரம்பிக்கும். ஆனால், மூன்றில் ஒருவருக்கு எந்த காரணமும் இல்லாமலும் கூட முடி கொட்டலாம். இந்த Telogen Effluvium-ல் முடிகள் கொட்டுவது, வளரும் பருவத்தில் இருந்து கொட்டும் பருவத்திற்கு மாறுகின்றன.

3 முதல் 6 மாதங்கள் வரையிலும் முடி கொட்டலாம். ஆனால், ஆறு மாதங்கள் தாண்டியும் கொட்டினால் அதை Chronic Telogen Effluvium என்றழைப்போம். சாதாரண Telogen Effluvium ஏற்படுவதற்கும் Chronic Telogen Effluvium ஏற்படுவதற்குமான வித்தியாசம், எது அதை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்து உள்ளது.

இரும்புச்சத்து குறைவினால் உண்டாகும் ரத்தசோகை, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் ஏற்படும் சிறு கோளாறு (அதிகம்/ குறைவு), Zinc குறைவினால் உண்டாகும் உடல் உபாதைகள் போன்ற காரணங்களால் முடி கொட்டுதல் ஏற்படும்போது அது Chronic Telogen Effluvium ஆகிறது.ஒரு சிறு பரிசோதனையை நாம் வீட்டிலேயே செய்து இது இருக்கிறதா என்பதை கண்டறியலாம். ஒரு 60 முடியை கட்டை விரலுக்கும், ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் பிடித்து மெதுவாக இழுக்க வேண்டும். ஏழு முடிகளுக்குக் கீழ் கொட்டினால் அது நார்மல்.

ஏழு முடிகளுக்கு மேல் கொட்டினால் அதை, அதிகம் கொட்டுவதாக கணக்கிட வேண்டும். இந்த பரிசோதனையை செய்யும்போது 24 மணி நேரத்துக்குள் ஷாம்பூ உபயோகப்படுத்தியிருக்கக் கூடாது. இந்த பரிசோதனையை Hair Pull Test என்று அழைப்பர். இதைத்தவிர சில பரிசோதனைகளும் உள்ளன.

இதைத்தவிர, Female Pattern Hair loss மற்றும் Diffuse Alopecla Areata போன்ற காரணங்களாலும் ஏற்படலாம். இவற்றுக்கான வித்தியாசத்தை தோல் நோய் மருத்துவரால்தான் கண்டறிய முடியும். தேவைப்பட்டால் சரும நல மருத்துவர் Complete Blood Count, Urine Routine, Serum Ferritin மற்றும் Thyroid Function Test போன்ற சில பரிசோதனைகளைச் செய்து முடி கொட்டுவது எதனால் ஏற்படுகிறது என்பதை உறுதி செய்வார்.

Female Pattern Hair Loss என்றால் என்ன?

ஆண்களுக்கு இளவழுக்கை அல்லது வழுக்கை ஏற்படுவதுபோல் பெண்களுக்கும் தலையில் வழுக்கை உண்டாகலாம். இது பொதுவாக முன்னந்தலையில் உள்ள முடியின் வேர்கள் Androgen ஹார்மோனுக்கு கொஞ்சம் Sensitive-ஆக இருப்பதால் வரக்கூடியது.பெண்களுக்கு உண்டாகக்கூடிய Female Pattern Hair Loss-ல் மூன்று வகைகள் உள்ளன.

முதல் வகையில் தலையில் வகிடு எடுக்கும் இடம் கொஞ்சம் அகலமாகத் தெரியும். இரண்டாவது வகையில், முன்னதைவிட இன்னும் கூடுதல் அகலமாகத் தெரியும். மூன்றாவது வகையில் தலைமுடி மிகவும் குறைந்து உச்சந்தலையில் உள்ள தோலே நன்கு தெரியும். ஆனால், ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் ஆண்களுக்கு உண்டாவதுபோல் முன்தலையில் உள்ள முடி முழுவதுமாக பெண்களுக்கு கொட்டாது.

சிலருக்கு ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் இது ஏற்படலாம். ஆனால், ஒரு சிலருக்கு நார்மல் அளவு ஆண்ட்ரோஜன் சுரந்தும்கூட அவர்களது முடியின் வேர் கால்களில் உள்ள செல்கள் அந்த ஹார்மோனுக்கு மிகவும் Sensitive ஆக இருப்பதனால் இது ஏற்படலாம். உடம்பில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால், முடி கொட்டுவதைத் தவிர வேறு சில அறிகுறிகளும் ஏற்படும்.

* அதிக அளவு பருக்கள் தோன்றுவது
* முகத்தில் அதிகமாக முடி முளைப்பது. (தாடி/மீசைபோல)
* முகத்தில் எப்போதும்போல் இல்லாமல் அதிக எண்ணெய் சுரப்பது.
* கழுத்தைச் சுற்றி கருப்பு திட்டுகள் உண்டாவது.
* பால் சுரப்பு போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

ஆண்ட்ரோஜன் சுரப்பதற்கான காரணங்கள்

Polycystic Ovarian Disease மற்றும் ovarian/ Adrenal Tumors. இவற்றைக் கண்டறிய, Ultrasound Abdomen and Pelvis மற்றும் ரத்தத்தில் உள்ள ஹார்மோன் அளவுகள் போன்றவற்றை பரிசோதனை செய்ய வேண்டும். Testosterone அளவு இரண்டு அல்லது இரண்டரை மடங்கு அதிகமாக இருந்தால் கர்ப்பப்பையிலோ அல்லது Adrenal சுரப்பியிலோ ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

Diffuse Alopecia Areata

இது புழுவெட்டில் ஒரு வகை. இவ்வகையில் தலை முழுக்க முடி கொட்டலாம். இதில் கவனித்துப் பார்த்தால் தலை முழுவதும் ஆங்காங்கே முடி இல்லாமல் நேரடியாக தோல்பகுதியைப் பார்க்க முடியும். அதனால்தான் இதை தோல் மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம். இதில் வெளியில்தான் புழு உள்ளதே தவிர இதை ஏற்படுத்தும் காரணம் புழுவோ பூச்சியோ அல்ல.

Chronic Telogen Effluvium

39-லிருந்து 60 வயது வரை உள்ள பெண்களில் பலர் மிக அதிக முடி கொட்டுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய கூந்தலைப் பார்த்தால், பெரிதாக முடி கொட்டியதுபோல் தெரியவில்லை என்றால் அதன் காரணம் Chronic Telogen Effluvium காரணமாக இருக்கலாம். இவர்களுக்கு தலை குளிக்கும்போது கொத்துக் கொத்தாக முடி கொட்டி பாத்ரூமில் தண்ணீர் செல்லும் வழிகளைக் கூட அடைக்கும்.

இவர்கள் இருக்கும் அறை, உபயோகப்படுத்திய சீப்பு, தலையணை உறை போன்றவற்றிலும் எங்கு பார்த்தாலும், நிறைய முடிகள் கொட்டியிருக்கும். இவர்களுடைய மண்டையில் முடி கொட்டியதுபோல் தெரியாவிட்டாலும், முடியின் அடர்த்தி குறைந்து எலிவால் போல இருப்பது நன்கு தெரியும்.

எப்படி சரி செய்யலாம்?

முதலில் முடி கொட்டுவதற்கான காரணத்தை அறிய வேண்டும். அதிக காய்ச்சல், உடல்நலக்குறைவு காரணங்களால் முடி கொட்டுவதை உணவில் சத்தான பொருட்களை உட்கொண்டாலே கட்டுப்படுத்திவிடலாம். இரும்புச்சத்து குறைபாடு, Zinc குறைபாடு மற்றும் தைராய்டு சுரப்பியில் பிரச்னை போன்றவற்றால் முடி கொட்டுகிறது என்றால் குறிப்பிட்ட பிரச்னையை முதலில் சரி செய்ய வேண்டும்.

பொதுவாக நம்மூர் பெண்களுக்கு Hemoglobin சரியான அளவில் இருக்காது. அப்படியே அது சரியான அளவில் இருந்தாலும், அடுத்து, Serum Ferritin அளவு சரியாக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். சில நேரங்களில், சில வகை மருந்துகள் உட்கொள்வதாலும் முடி கொட்டலாம். அப்படி இருந்தால் அந்த மருந்துகளை நிறுத்தவோ அல்லது மாற்றவோ செய்ய வேண்டியிருக்கும்.

Female Pattern Hair Loss என்றால் 2 சதவீதம் Minoxidil லோஷன் உபயோகிக்கலாம். Androgen ஹார்மோன் அதிகம் சுரப்பதால் உண்டாகும் முடிஉதிர்வை தடுக்க, சில மாத்திரைகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். Poly cystic ovarian disease – ஆக இருந்தால் அதற்கான வைத்தியமும் எடை குறைப்பும் முக்கியம்.

Diffuse Alopecia Areata வாக இருந்தால் சில நாட்களுக்கு ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். Chromic Telogen Effluvium கூட 3 முதல் 10 வருடங்களில், தானாகவே சரியாகி விடும். அதனால், உங்களுக்கு முடி கொட்டும் பிரச்னை ஏற்படுகிறது என்றால், அதற்கான காரணத்தை சரும நோய் நிபுணரின் உதவியோடு கண்டறிந்து சரியான வைத்தியம் செய்தால் அதிலிருந்து எளிதாக வெளி வர முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாறாக முடி கொட்டுகிறதே என்று கவலைப்பட்டு எல்லா தைலங்களையும் உபயோகிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா?(அவ்வப்போது கிளாமர்)
Next post கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் சோனியா !! ( உலக செய்தி)