தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி! (உலக செய்தி)

Read Time:2 Minute, 21 Second

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில், 230 இடங்களை கொண்ட பெரிய மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. ஆளும் பாஜகவும் சிறிய எண்ணிக்கை வித்தியாசத்தில் பின் தொடர்ந்தது.

ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில் நேற்று இரவு நிலவரப்படி காங்கிரஸ் 115 இடங்களில் வெற்றி பெற்றதாக தெரியவந்தது. ஆளும் பா.ஜனதாவுக்கு 108 இடங்கள் கிடைத்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் மெஜாரிட்டியை நெருங்கியபோதும் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநில தேர்தல் இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்துள்ளது. அதில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளதால், ஆட்சியமைக்க இன்னும் ஒரு உறுப்பினரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்க முடியும். எனவே பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அயன் பட சூர்யாவை மிஞ்சிய பெண்கள் செய்ததை பாருங்க!!(வீடியோ)
Next post என்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள்! (சினிமா செய்தி)