ஃபேஷனாகும் ஃப்ரூட்!!(மருத்துவம்)

Read Time:6 Minute, 39 Second

உலகமயமாக்கலின் விளைவாக புதிய புதிய பழங்கள் இப்போது அறிமுகமாகின்றன. விதவிதமான வடிவங்களுடனும், கண்ணைக் கவரும் வண்ணங்களுடனும் ருசி பார்க்கும் ஆவலையும் தூண்டுகின்றன. அந்த வகையில், சமீபகாலமாக பழக்கடைகளில் ஃபேஷனாகும் ஒரு ஃப்ரூட்டாக காணக் கிடைக்கிறது Passion Fruit. இதன் சிறப்புகள் என்னவென்று பார்ப்போம்….

Passion fruit உருண்டையாகவோ அல்லது முட்டை வடிவத்திலோ இருக்கும். மஞ்சள் நிறத்தில் சிவப்பு கலந்த நீல நிறமாக இருக்கும். தோல் தடித்து காணப்படும். உள்ளே உள்ள சதைப் பகுதியானது பச்சை கலந்த ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இது விதையோடு ஒட்டி இருக்கும். புளித்த இனிப்பு சுவை கொண்டது.

பழம் நன்கு பழுத்த உடன் இதன் தோல் சுருங்கி காணப்படும். இது அழுகாது. இந்த பழம் பழுக்கப்பழுக்க இதன் தோலின் நிறம் மாறிக்கொண்டே இருக்கும். சிவப்பு கலந்த நீல நிற அல்லது மஞ்சள் நிறங்களில் இவை மாறும். இது வகைக்கு ஏற்ப நிறம் கொண்டிருக்கும்.இப்பழத்தை கையால் அழுத்தமாகத் தொட்டால் ‘டப்’ என பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் வரும். ஆகையால் மலைப்பகுதி மக்கள் இப்பழத்தை ‘பட்டாசு பழம்’ என அழைப்பார்கள். மேலும் ‘சிறிய மாதுளை’ என ஸ்பானிஷ் மக்கள் அழைப்பார்கள்.

இப்பழம் பிரேசில், உருகுவே பகுதியிலும், வெப்ப மண்டல பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவில் வங்காளம் மற்றும் தென் இந்திய மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. பல வீட்டு தோட்டங்களில் இதை காண முடியும். தங்க நிறத்துடன் கூடிய சதைப்பகுதி அதனுள்ளே கருப்பு விதையும் இருக்கும். பழத்தின் சதை வாசம் நிறைந்தது.

ஃபேஷன் ஃப்ரூட்டின் பழச்சாற்றில் மருத்துவ குணங்கள் மிகவும் நிறைந்திருக்கின்றன. ஃபேஷன் பழம் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைய உள்ளதால் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள உதவுகிறது. உடலில் இருக்கும் சேதமடைந்த அல்லது தேவையற்ற செல்களை வெளியேற்ற உதவுகிறது. குறிப்பாக இதில் வைட்டமின் சி, பீட்டா-கரோட்டின் மற்றும் பாலிபினால்கள் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக இருக்கிறது. இதய நோய் மற்றும் புற்றுநோய், நாள்பட்ட வீக்கம் (அ) கட்டிகள் போன்றவற்றுக்கு எதிராக அவை பாதுகாக்கிறது.

வைட்டமின் சி என்பது உங்கள் உணவில் இருந்து பெற வேண்டிய முக்கியமான ஆக்ஸிஜனேற்றமாகும். இது ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மற்றும் ஆரோக்கிய வயதுடன் இருக்க உதவுகிறது. பீட்டா கரோட்டின் ஒரு முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும். உங்கள் உடலில், இது வைட்டமின் ஏ-யாக மாற்றப்படுகிறது. இது நமது கண் பார்வையை பாதுகாப்பதற்கு அவசியமானதாகும். தாவர உணவுகளிலிருந்து நிறைய பீட்டா கரோட்டின்களைக் கொண்ட உணவுகள் சில புற்றுநோய்களின் ஆபத்துடன் தொடர்புடையது.

இதில் புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பக புற்றுநோய் அடங்கும். இது ஒரு நல்ல நார்ச்சத்து ஆதாரமாகும். ஒரு 18 கிராம் பேராசிரிய பழம் 2 கிராம் ஃபைபர் கொண்டிருக்கிறது, அவற்றில் பெரும்பாலானவை கரையக்கூடிய ஃபைபர் ஆகும். மலச்சிக்கலைத் தடுக்கவும் நார்ச்சத்து மிக முக்கியம். ஆனால், பெரும்பாலான மக்கள் அதைப் போதிய அளவு சாப்பிடுவதில்லை. கரையக்கூடிய ஃபைபர் உங்கள் உணவின் செரிமானத்தை கூட்டுகிறது, இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதை தடுக்கிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், இதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட நோய் ஆபத்திலிருந்து குறைக்க உதவுகிறது. இதன் இலைகளைக் கொண்டு ஐரோப்பிய நாடுகள் மருந்துகள் தயாரிக்கின்றன. வைட்டமின் ஏ,பி,சி என அனைத்தும் நிரம்பிய இவ்வகைப் பழங்களை அப்படியே சாப்பிடலாம். அதோடு இப்பழத்திலிருந்து ஜெல்லி மிட்டாய், சாலட், சர்பத், ஐஸ்கிரீம், ஜூஸ் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.

மேலும் இதன் சதைப் பகுதி அமிலத்தன்மை மற்றும் மிகவும் வாசனை கொண்டுள்ளதால் இதனைப் பிழிந்து சாறு எடுத்து குளிர்பானங்கள் தயாரிக்கின்றனர். இதன் சாறு இதயத்தை பலப்படுத்தும் பானமாக பயன்படுகிறது. இதனை வாசனை திரவியமாக டப்பாக்களில் அடைத்து வைத்து விற்பனை செய்கின்றனர். மேலும் கற்கண்டு தயாரிக்கவும் பயன்படுகிறது.

பழப்பச்சடிகளில் சுவையூட்ட பயன்படுகிறது. இப்பழத்துடன் கோழிக்கறி, மீன் ஆகியவை உண்பதற்கு சுவையாக இருக்கும். பழத்தின் தோல் உரமாக பயன்படுகிறது. மேலும் இதன் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கு பயன்படுகிறது. இதன் இலை, தண்டு டானிக் தயாரிக்க பயன்படுகிறது. இப்பழக் கொடியை வீட்டிலேயே மிக எளிதாக வளர்த்து, பழரசங்களை நாமே தயாரிக்கவும் முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்தகால மனிதர்கள் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படாத அந்தரங்க உண்மைகள்! (வீடியோ)
Next post அகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்!!!(மகளிர் பக்கம்)