தமிழ் சினிமா வசூலுக்கு பொய் அழகு!!(சினிமா செய்தி)
ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் லைகா தயாரிப்பில் நவம்பர் 29 அன்று வெளியான 2.0 வசூல் சாதனை நிகழ்த்தி வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. நான்கு நாட்களில் 400 கோடி (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) 7 நாட்களில் 500 கோடி வசூல் என லைகா நிறுவனம் அறிவித்துவிட்டது.
குற்றவாளிகள் என்னதான் முன்ஜாக்கிரதை உணர்வுடன் செயல்பட்டாலும் ஏதேனும் ஒரு தடயத்தை அழிக்காமல் விட்டு விடுவார்கள் என்பது புலனாய்வு துறைகளில் பேசப்படும் உரையாடல்.
சத்யம் தியேட்டரில் நடைபெற்ற 2 .0படத்தின் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் படத்தை தயாரிக்க 600 கோடி ரூபாய் செலவாகியிருப்பதாக குறிப்பிட்டார். படத்தின் புரமோஷனுக்காக பேட்டி கொடுத்த ஷங்கர் அப்பேட்டியில் பட்ஜெட் பற்றிய பத்திரிகையாளர் கேள்விக்கு 450 கோடி வரை செலவு ஆனதாக பதில் கூறினார்.
இதில் எது உண்மை, அது போன்றதுதான் 2.0 படத்தின் நான்கு நாள் வசூல் 400 கோடி என்று அறிவித்தவர்கள் ஏழு நாட்களில் 500 கோடி என்று கூறுவது பொருத்தமானதாக இருக்குமா என யோசிக்க தவறி விட்டார்கள் போல.
படம் வெளியான நவம்பர் 29 அன்று தொடக்க காட்சிக்கு பின் ஸ்லோ மோஷனில் தியேட்டர் டிக்கெட் விற்பனை இருந்தது என்பது மறைக்க முடியாத உண்மை. வெளிநாடுகளில் இப்படத்திற்கு வழக்கத்தை காட்டிலும் கூடுதல் வரவேற்பும், வசூலும் இருந்தது. அதிகமாக இருக்க வேண்டிய குறிப்பாக தமிழகத்தில் முதல் நாள்மிக மிக குறைவாக 13 கோடி ரூபாய்மொத்த வசூல் என்கிறது விநியோக வட்டாரம்.
தமிழகத்தை பொறுத்தவரை ஒரு படத்தின் உண்மையான மொத்த வசூல் தெரிந்த நபராக இருப்பது தியேட்டர் மேனேஜர் மட்டும் தான். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதி உள்ள தியேட்டர் வசூல் மட்டும் மறைக்க முடியாத ஒன்று.
தயாரிப்பு துறையில் தனது தொழில் முறை போட்டியாளரான சன் பிக்சர்ஸ் சர்கார் படத்தை தயாரித்து சினிமா வியாபாரத்தில் மறு பிரவேசம் செய்து வெற்றி கண்டுள்ளது. அதற்கு இணையாக லைகா 2.0 படத்தை வசூல் ரீதீயாக வெற்றி படமாக முன்நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இயக்குனர் ஷங்கரின் திட்டமிடுதலில் ஏற்பட்ட தவறால் 2.0 படத்தை முடிப்பதில் வருடக் கணக்கில் தாமதம் ஏற்பட்டது. மேலும் படத்தை செம்மைப்படுத்த 6 மாத கால அவகாசம் கேட்டார் ஷங்கர்.
இனியும் தாமதிக்க முடியாது என்ன இருக்கோ அதை படமாக ஆக்கி கொடுங்கள் என தயாரிப்பு தரப்பு கொடுத்த நெருக்கடியில் முழு திருப்தி இன்றி படத்தை தணிக்கைக்கு அனுப்பினார் ஷங்கர் என்கிறது தயாரிப்பு தரப்பு.
இதற்கும் வசூலுக்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வி எழலாம். திட்டமிட்ட அடிப்படையில் சன் பிக்சர்ஸ் சர்கார் படத்தை ரிலீஸ் செய்யும்போது நம்மால் முடியவில்லை என்கிற ஆதங்கம் லைகா நிறுவனத்திற்கு. அதன் காரணமாகத்தான் ஷங்கருக்கு அழுத்தம் கொடுத்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்தனர். சர்கார் போன்று 2.0வசூல் சாதனை நிகழ்த்தும் என லைகா நம்பியது அதனை பொய்யாக்கினர் தமிழக சினிமா ரசிகர்கள். இந்த படத்தில் முதல் கட்டமாக அசல் தேறினால் போதும் என்பது தான் தயாரிப்பு தரப்பு ஏதிர்பார்த்தது, அதனால் தான் பெரும் வருமானத்தை கொடுக்கக்கூடிய தமிழகத்தில் 60 கோடி ரூபாய் அளவுக்கு தயாரிப்பாளருக்கு பங்குத் தொகை கிடைத்தால் போதுமானது என்ற திட்டத்தில் விநியோக முறையில் படத்தை 650 திரைகளுக்கு மேல் திரையிட்டனர்.
முதல் நாள் தமிழகத்தில்வசூலில் தடுமாற்றம் இருந்தாலும் 3D தியேட்டர்களில் இப்படத்தின் வசூல் முன்னேற்றப் பாதையை நோக்கி முன்னேறியது. மற்ற தியேட்டர்களில் வசூல் வறிய நிலையை தொடர்ந்ததால் நாளை 3D அல்லாத பெரும்பான்மையான தியேட்டர்களில் 2 .0 மாற்றப்பட்டு வேறு படங்கள் திரையிடப்பட உள்ளன.
Average Rating