ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் 20 கோடி ரூபாவுக்கு ஏலம் !!(உலக செய்தி)

Read Time:1 Minute, 24 Second

ஜெர்மனியை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்றவர். இவர் கடந்த 1954 ஆம் ஆண்டு தனது 74 வது வயதில் ஜெர்மனியை சேர்ந்த தத்துவ அறிஞர் எரிக் குட்கின்ட் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அவர் தான் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. அறிவியலுக்கும், மதத்துக்கும் இடையேயான விவாத பொருளை மையமாக கொண்டது.

எனவே, இதை ‘கடவுள் கடிதம்’ என அழைக்கின்றனர். அந்த கடிதம் நியூயார்க்கின் கிறிஸ்டி மையத்தில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

இக்கடிதத்தை வாங்க ஆன்லைனில் கடும் போட்டி நிலவியது. முடிவில் அது 20 கோடிக்கு ரூபாவுக்கு ஏலம் போனது.

அந்த கடிதம் 7 கோடி முதல் 7 கோடியே 70 இலட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 20 கோடிக்கு ஏலம் போனதாக கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐன்ஸ்டீன் கடிதங்கள் ஏலம் விட்டது இது முதன் முறையல்ல. ஏற்கனவே அவரது கடிதங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவில்தான் !! இப்படியும் ஒரு கிராமம் ! திருமணமே செய்யாமல் உறவு மட்டும் போதும் ! (வீடியோ)
Next post சுண்டைக்காய்னா இளக்காரமா…!!(மருத்துவம்)