ஜெர்மனியில் அதிவேக பறக்கும் ரெயில் கவிழ்ந்து 19 பேர் பலி

Read Time:1 Minute, 58 Second

000021.gifஜெர்மனியின் லாதன் நகரில் இருந்து டீர்பன்விச் நகருக்கு அதிவேக மின்காந்த ரெயில் விடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் இந்த திட்டம் சமீபத்தில்தான் முடிவடைந்தது. உயரமான பாலத்தின் மீது செல்லும் இந்த மின்காந்த பறக்கும் ரெயில் அதிவேகத்தில் செல்லக்கூடியது. மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் இது செல்லும். இந்த ரெயில் நேற்று லாதன் நகரில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த ரெயில் பாலத்தின் மீது நின்ற இன்னொரு ரெயில் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் மின் காந்த ரெயில் பெட்டிகள் கவிழ்ந்தன. சில பெட்டிகள் கீழே விழுந்தன. சில பெட்டி கள் பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. நின்று கொண்டிருந்த இன்னொரு ரெயில், ரெயில் பாதையை சோதித்து பார்க்கவும், பழுது பார்க்கவும் நின்று கொண்டிருந்தது. அப்போதுதான் இந்த விபத்து நடந்தது.

இந்த விபத்தில் 19 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலியானவர்களில் சிலர் ரெயில்வே ஊழியர்கள். மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அந்த ரத்தில் தொங்கும் கவிழ்ந்த பெட்டிகளை ராட்சத கிரேன் கொண்டு தூக்கி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பின்லேடனைப் பிடிக்க பாகிஸ்தானுக்கு துருப்புகளை அனுப்பவும் தயங்க மாட்டோம் -அதிபர் புஷ் மிரட்டல்
Next post சன்பீஸ்ட் ஓப்பன் டென்னிஸ்: ஹிங்கிஸ்- சானியா அரை இறுதியில் மோதல்