பாகிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம்!!(கட்டுரை)
பாகிஸ்தானில் கடந்த மாதம் இடம்பெற்ற இரண்டு தாக்குதல்கள், குறிப்பாக கராச்சியில் உள்ள சீனத் துணைத் தூதரகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது, பாகிஸ்தான் பிரதமரின் சீனாவுக்கான விஜயத்தை ஒரு குறைநிரப்பு விஜயமாக மாற்றியுள்ளதுடன், இது பாகிஸ்தான் சீனாவுடன் சீனாவின் பாரிய, சர்ச்சைக்குரிய பட்டுப்பாதை தொடுப்பு தொடர்பான தனது உறுதியான நிலையை பேணுதல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மோசடி மற்றும் பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழுவின் பரிந்துரையில் பாகிஸ்தானை சிக்கலான நாடாக பிரகடனப்படுத்தியத்திலிருந்து விடுவித்தலில் சீனாவின் ஆதரவை கோருதல் என்பவற்றில் சிக்கலான தன்மையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த தாக்குதலானது பாகிஸ்தானிய மாகாணத்துக்கான சுயநிர்ணயத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு தேசியவாத குழுவால் நடாத்தப்பட்டமை மேலும், அது சீனாவின் 45 பில்லியன் டொலர் முதலீட்டு மையம், சீனாவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி உற்பத்தி உந்துதல் மற்றும் பட்டுப்பாதை அமைப்புக்கான நிலையம் என்பவற்றில் நேரடியான தாக்கங்களை உண்டுபண்ணியுள்ளமையே குறித்த சீன – பாகிஸ்தான் உறவுநிலை சுமூகமாக இருப்பினும், பாகிஸ்தான் தனது பேரம்பேசும் தன்மையை இழக்க வழிவைத்திருந்தது.
நிதி நெருக்கடியின் விளிம்பில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக இருக்கின்றமை, பிரதமர், பாகிஸ்தானின் நட்பு நாடுகளான சீனா, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றிடம் இருந்து நிதி கடன்களை பெறுவது மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்பிலும் கரிசனை காட்டியிருந்தார். மறுபுறம், பாகிஸ்தானின் உள்ளக அரசியலில் சீன முதலீட்டு விதிமுறைகளை பரவலாக விமர்சிப்பதைப் பொறுத்தவரை, பிரதமர் கான் சீர்செய்வதற்காகவும் அதன் மூலம், இரு நாடுகளும் இடையில் சீனாவின் பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை (CPEC) என அழைக்கப்படும் பொருளாதார அபிவிருத்திக்கான சாலை போக்குவரத்தையும் ஆரம்பிக்கும் நோக்காகவுமே தனது விஜயத்தை மேற்கொள்ள தலைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மானின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றதன் மூலமும், சல்மான் மற்றும் பிரதமர் கான் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையிலும், சவூதி அரேபியா பாகிஸ்தானின் மத்திய வங்கியில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகையை முதலீடு செய்வதற்கு இணங்கியிருந்ததுடன், ஓராண்டுக்கான எண்ணெய் இறக்குமதியை செலுத்துவதற்கு குறித்த 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை தக்கவைத்துக்கொள்ளவும் உறுதியளித்தது. அதன்படி சவூதி பாகிஸ்தானின் மத்திய வங்கியில் கடந்த வாரம் 1 பில்லியன் அமெரிக்க டொலகர்கள் வைப்பிலிட்டும் இருந்தது.
ஆயினும் இதற்கு அதிகமான உதவிகளை எதிர்பார்த்திருந்த சீனாவிடமிருந்து குறித்தளவு நிதி உதவிகள் கூட கிடைக்காமல் போனதே அண்மைய விஜயத்தின் தோல்வி எனலாம். மேலும், கான் தனது கோரிக்கையை வலியுறுத்தி சீனாவின் அழுத்தத்தை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் சென்ற பயணத்தில் சீனா தனது அழுத்தத்தை சமிக்கை செய்தமையே குறித்த விஜயத்தின் மேலதிகமான தோல்வியாகும்.
பிரதமர் கான் அவர்கள் தனது விஜயத்தின் போது CPEC உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் பேச எத்தனித்த இந்நிலையில் சீனா தனது போக்குவரத்து அமைச்சரை கான் அவர்களை வரவேற்க அனுப்பி இருந்தமையை குறித்த சமிக்கை ஆகும்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் மோசடி மற்றும் பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழுவின் பரிந்துரையில் பாகிஸ்தானை சிக்கலான நாடாக பிரகடனப்படுத்தியத்திலிருந்து விடுவித்தலில் சீனாவின் ஆதரவு கிடைக்காமல் போனது பிரதமர் கானை சர்வதேச நாணய நிதியத்திடம் நேரடியாகவே சரணடைய செய்ததெனலாம். இதன் படி, அமெரிக்காவின் ஆதரவுடன் சர்வதேச நாணய நிதியம் பிணை எடுப்புக்காக கடுமையான நிபந்தனைகளை பாகிஸ்தான் மீது விதித்துள்ளமை, பாகிஸ்தானின் உள்ளக அரசியலில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.
குறித்த சீனா – பாகிஸ்தான் அண்மைய பிரிவினைக்கு காரணம் தனியாகவே பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகத்தில் நடாத்தப்பட்ட தாக்குதலோ அல்லது CPEC உடன்படிக்கைகளில் மாற்றம் கொண்டுவர சீனா விரும்பாமையோ அல்ல. ஆயினும், சவூதி அரேபியாவின் நிதி ஆதரவு மற்றும் தூதரகத்தின் மீதான தாக்குதல் இரண்டையும் சீனா ஒரே கண்ணோட்டத்தில் நோக்குகின்றது. அது பாகிஸ்தானில் அரசியல் வன்முறைக்கு பாகிஸ்தான் அரசாங்கம் இன்னும் கைகொடுக்கிறது என்பதும் அது ஒரு ஸ்திரத்தன்மையான பொருளாதார நிலைமையை பிராந்தியத்தில் (தனது நலன்களுக்காக) கொண்டுவராது என சீனா கவலைப்படுவதுமே காரணமாகும். இதன் ஒரு வெளிப்பாடே, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங், சீனா பாகிஸ்தானில் உள்ள சீன விவகார மட்டங்களில் பாதுகாப்புத் தரத்தை உயர்த்துவதற்காக பாகிஸ்தானை கேட்டுக்கொண்டமை பார்க்கப்பட வேண்டியதாகும். இதன் படி பாகிஸ்தானில் உள்ள சீன சொத்துக்களை பாதுகாக்க பாகிஸ்தான் அர்ப்பணிக்கப்பட்ட 15,000 இராணுவ துருப்புக்களை நிலையில் அமர்த்தியுள்ளமை பார்க்கப்படவேண்டியதாகும்.
இந்நிலைப்பாடுகள் எல்லாமே சீனா தனது ஆதிக்கத்தில் பாகிஸ்தானை வைத்திருக்க விரும்பும் ஒரு அரசியல் நிரலாகவே பார்க்கப்பட வேண்டியதுள்ளதும், பாகிஸ்தானுக்கு இப்போதைக்கு சீனாவுடன் இணைந்திருப்பதை தவிர வேறெந்த வழிகளும் இல்லை என்பதே யதார்த்தமானதாகும்.
Average Rating