பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளில் இருந்து விலக கத்தார் முடிவு !!(உலக செய்தி)

Read Time:2 Minute, 29 Second

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன.

இந்த முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளுக்கு சவுதி அரேபியா நாட்டின் எரிபொருள்துறை மந்திரி காலித் அல் ஃபலி கடந்த மாதம் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

நாளொன்றுக்கு உற்பத்தியில் 10 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொண்டால் பெட்ரோல் விலையை சமநிலையில் இருக்குமாறு செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.

சவுதி அரேபியாவும் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினந்தோறும் 5 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்

இந்நிலையில், பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து 1-1-2019 முதல் விலகப்போவதாக கத்தார் நாடு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை தோஹாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று வெளியிட்ட கத்தார் நாட்டு எரிசக்தி துறை மந்திரி சாத் அல்-காபி, ‘நாங்கள் தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுவோம்.

ஆனால், எங்கள் நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால் இனி இயற்கை எரிவாயு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்திவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுவரை உங்களுக்கு தெரியாத இந்தியா பற்றிய தகவல்கள்!(வீடியோ)
Next post பிரச்னை பொதுவானது… காரணங்கள் தனியானது!!( மருத்துவம் )