இனி ஓராண்டுக்கு கவலை இல்லை!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:3 Minute, 36 Second

காண்டமா? ‘நோ’ சொல்லும் துணை… உங்களுக்கோ கருத்தடை மாத்திரையைப் பார்த்தாலே ‘கடுப்ஸ்’ என்னவாகும்? உங்க செக்ஸ் வாழ்க்கை ‘ஹோல்டு’ ஆகிடும். டோன்ட் ஒர்ரி…ஓராண்டுக்கு காண்டமோ, மாத்திரையோ இல்லாத, பாதுகாப்பான செக்ஸுக்கு வந்துவிட்டது ‘வாஸல் ஜெல்’. ஆச்சரியமா இருக்கா? முதலில் நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது அறிவியலுக்கு!

12 மாதகாலம் முயல்களிடத்தில் ‘வாஸல் ஜெல்’ என்ற ஜெல் கருத்தடை மருந்தை முன்மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், நீடித்த பாதுகாப்பு
தருவதை அமெரிக்க சிகாகோ நகரின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டொனால்ட் வாலர் உறுதி செய்துள்ளார். “அமெரிக்காவை சேர்ந்த லாபநோக்கற்ற நிறுவனமான பார்சிமஸ் என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள ஹைட்ரோஜெல் மூலப்பொருளை கொண்ட ‘வாஸல் ஜெல்’ எளிதில் கரையக்கூடிய தன்மை உடையது என்பதால், விரைவான கருத்தடைக்கு உகந்தது. இதனை ஊசிமூலம் ஆண் இனப்பெருக்க குழாயில் செலுத்தும் போது விந்தணுக்கள் உற்பத்தியை உடனடியாக தடைசெய்வதோடு, ஒரு வருடம் வரை பாதுகாப்பளிக்கும்’’என்கிறார் வாலர்.

‘வாஸல் ஜெல்’ பற்றிய நம் சந்தேகத்தை ஆன்ட்ராலஜிஸ்ட் டாக்டர் ஸ்ரீதேவ் பரதனிடம் கேட்டோம். “இது ஒரு நல்ல கண்டுபிடிப்புதான். இப்போது ஆண்களுக்கு காண்டம் மற்றும் வாசக்டமி மட்டுமே கருத்தடைக்குத் தீர்வாக இருந்து வருகிறது. இதில், வாசக்டமி அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது, நிரந்தரமாகவே இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலை தங்களுக்கு ஏற்பட்டுவிடும் என்ற காரணத்துக்காகவே ஆண்கள் விரும்புவதில்லை. செக்ஸில் ஈடுபடும் போது காண்டம் உபயோகிப்பதால், முழுமை பெற முடிவதில்லை என்ற அதிருப்தி வேறு. பெண்களுக்கோ, இப்போதுள்ள கருத்தடை மாத்திரைகள், மற்ற கருத்தடை சாதனங்கள் எல்லாமே பக்கவிளைவுகள் உண்டாக்குபவையாக இருக்கின்றன.

இதனால் தம்பதிகள் தாம்பத்தியத்துக்கு ‘இடைக்காலத் தடை’ விதித்துக் கொள்கின்றனர். ‘வாஸல் ஜெல்’ ஊசி போடுவதன் மூலம் ஒரு வருடத்துக்கு பிரச்னையில்லாததால், வரவேற்கத்தக்க கண்டுபிடிப்பு என்றே சொல்லலாம். ஆனால், அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், ஏழை மக்களின் ‘வாங்கும் சக்தி’யே தீர்மானிக்கும் காரணியாகிறது. மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், அதன் விலை இருக்கும் பட்சத்தில், அனைவரையும் சென்றடையும் என்பதில் சந்தேகமில்லை’’என்கிறார் ஸ்ரீதேவ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா!!(மகளிர் பக்கம்)
Next post பல்லெல்லாம் மாணிக்கப் பல்லாகுமா?(மகளிர் பக்கம்)