அக்கா பாலிவுட் ராணி தங்கை கோல்ப் இளவரசி!!(மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 28 Second

அனிஷா, கோல்ப் பயிற்சியாளர் மற்றும் தொழில் முறை கோல்ப் வீரர்களில் ஒருவர். இதுவரை 15 சர்வதேச கோல்ப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அனிஷாவுக்கு மற்றொரு அடையாளமும் உண்டு. இவரின் தந்தை பிரபல பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோன். அக்கா பாலிவுட்டின் கனவுக்கன்னி தீபிகா படுகோன். இவரின் ஆசை தங்கை தான் அனிஷா படுகோன். தனது 12 வயதில் கோல்ப் விளையாட ஆரம்பித்த அனிஷா, அதன் மேல் ஏற்பட்ட தீவிர காதலால் அதை தன்னுடைய கரியராகவே மாற்றிக் கொண்டார்.

‘‘இந்த ஒரு விளையாட்டில் தான் நாம் நம்முடன் போட்டிப்போட முடியும். அதனால்தான் எனக்கு இந்த விளையாட்டு பிடிச்சு இருந்தது’ என்று சொல்லும் அனிஷா தற்போது ஒரு அமைப்பின் நிர்வாக இயக்குனர். 2015ல் தீபிகா பதுகோன் மனதளவில் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து அவரே மீண்டு பாலிவுட்டில் இன்று வெற்றிகரமாக முன்னணி நடிகையாக உள்ளார்.தன்னை மாதிரியே மனதளவில் பாதிக்கப்பட்டவர்களின் மனதை மாற்றி மீண்டும் சிறப்பாக செயல்பட ‘Live Laugh Love Foundation’ என்ற அமைப்பை துவக்கினார். அதற்கு ஒருவரை இயக்குநராக நியமித்திருந்தார்.

சில காரணங்களால் அவர் விலக, சரியான நபர் இல்லாததால் இப்போது அதை அனிஷாவே நிர்வகித்து வருகிறார். ‘‘ஆரம்பத்தில் எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல தான் இருந்தது. கோல்ப் விளையாடி பழகிய எனக்கு ஆரம்பத்தில் ஒரு அமைப்பை நிர்வகிக்க கொஞ்சம் கடினமா தான் இருந்தது. இதுவும் கற்பிக்கும் படலம் தான்னு அக்கா சொல்ல, இப்ப தினமும் லஞ்ச் பாக்சோடு நானும் மற்ற பெண்கள் போல அலுவலகம் செல்ல ஆரம்பிச்சுட்டேன்’’ என்கிறார் 27 வயதான கோல்ப் இளவரசி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊர் சுத்துறவங்களுக்கு ஆயுள் அதிகம்!!(மருத்துவம்)
Next post மூடி மறைத்த தல அஜீத்தின் ரகசியத்தை வெளியிட்ட ரசிகன் | அதிர்ச்சி (வீடியோ)!!