பெண்ணை திருமணம் செய்த ஜாக்கி சான் மகள்! (சினிமா செய்தி)
அதிரடி ஆக்ஷன் படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்திழுத்தவர் நடிகர் ஜாக்கி சான். ஹாங்காங் அழகு ராணி பட்டம்பெற்ற எலைன் என்ஜி யி லீய் என்ற பெண்ணுடன் கடந்த 1999 ஆம் ஆண்டுவாக்கில் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். இந்த உறவின் மூலம் பிறந்த ஒரே பெண் குழந்தையான எட்டா என்ஜி சோக் லாம் என்பவருக்கு தற்போது 19 வயதாகிறது.
ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட எட்டா என்ஜி, கடந்த ஆண்டில் கனடா நாட்டை சேர்ந்த அன்டி ஆட்டம் என்ற 31 வயது பெண்ணின்மீது காதல்வசப்பட்டார். ஓராண்டாக கனிந்துவந்த இவர்களின் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
கனடா நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக நவம்பர் 8 ஆம் திகதி அந்நாட்டு அரசு இவர்களுக்கு திருமண சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில், இந்த தம்பதியர் ஹாங்காங் நகருக்கு வந்துள்ளனர்.
இதுதொடர்பாக, பிரபல தற்காப்பு கலை வல்லுனரான எட்டா என்ஜி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எங்கு சென்றாலும் சொந்த ஊரில் இருப்பது போன்ற பாதுகாப்பான உணர்வு கிடைப்பதில்லை. மனைவியும், மனைவியுமாக நாங்கள் தற்போது ஹாங்காங் நகருக்கு வந்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜாக்கி சானின் ஆதரவு இல்லாமல் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்துவந்த எட்டா என்ஜி, கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் இருந்து வெளியேறினார். வசிக்க இடமின்றி தனது கனடா காதலியுடன் ஹாங் காங் நகரில் மேம்பாலத்துக்கு அடியில் தங்கி இருந்ததாக முன்னர் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating