யோக முத்ரா !!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 28 Second

யோக முத்ரா ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் தொப்பையை விரைவில் குறைத்துவிடலாம். மேலும் முதுகு வலி, சிறுநீரக பிரச்னை, தண்டுவட பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை இந்த யோக முத்ரா ஆசனம் சரி செய்கின்றது. காலையில் எழுந்து வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்ய சிலருக்கு நேரம் இருக்காது.

இந்த நேரத்தில் நீங்கள் காலையில் எழுந்து வீட்டிற்குள்ளேயே ஒரு பத்து நிமிடம் இந்த யோக முத்ரா ஆசனத்தை செய்யலாம். யோக முத்ரா ஆசனம் செய்வதால் மன அழுத்தம் நீங்கும். நீண்ட நேரம் கணினி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இந்த ஆசனத்தை செய்வதால் முதுகுத்தண்டுவடத்தில் நல்ல வளைவு ஏற்படுவதோடு, முதுகு வலி வருவதும் தடுக்கப்படும்.

யோக முத்ரா ஆசனத்தின் பலன்கள்:

இந்த யோக முத்ரா ஆசனம் செய்யும் போது வயிற்றுப் பகுதி அதிகம் அழுத்தப்படுவதால், வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை விரைவில் குறையும். இறுக்கமான தசையை தளர்த்தி, உடலை ரிலாக்ஸ் செய்யும். சீராக செயல்படாமல் இருந்த குடல்கள் நன்கு செயல்பட்டு, செரிமானம் நன்கு நடைபெற்று, கழிவுகள் குடலின் வழியே வெளியேறும்.

சிறுநீரக மண்டலம் எவ்வித தங்குதடையின்றியும் நடைபெற யோக முத்ரா உதவும். சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் குணமாகும். நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். உடலின் தண்டுவடத்தில் இருந்து செல்லும் நரம்புகள் அனைத்தும் வலிமை பெற்று உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, அதனால் ஏற்படும் வேறு பல பிரச்னைகளையும் தவிர்க்கலாம். முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த யோகா முத்ரா ஆசனத்தை செய்து வந்தால், முதுகு வலி நீங்கிவிடும்.

யோக முத்ரா ஆசனம் செய்முறை:

முதலில் பத்மாசனம் நிலையில் அமரவும். பின்னர் கைகளை பின்னே மடித்து, வலது கை இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொள்ளவும். இப்பொழுது மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொடவும் இப்படி 30 வினாடிகள் செய்யவும். பின்னர் மூச்சை உள்ளே இழுத்தவாறு எழவும். இப்படி தினமும் 3 முறை செய்து வர வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்!!(கட்டுரை)
Next post குறை சொன்னால் குஷி இருக்காது!!(அவ்வப்போது கிளாமர்)