புஜங்காசனம்!!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 16 Second

விரிப்பின் மேல் வசதியாகக் குப்புறப்படுத்துக் கொள்ளவும். கால்களை நேராகவும், பாதம் இரண்டும் ஒன்றாக, விரல்களைத் தரையில் ஊன்றி வைக்கவும். உள்ளங்கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும் (கைகள் தோள்பட்டைக்கு சற்று கீழே இருத்தல் அவசியம்). முழங்கைகள் பின்நோக்கி இருக்க வேண்டும். நெற்றியை தரையில் வைக்கவும். இது ஆரம்ப நிலை.

கண்கள் இரண்டையும் மெதுவாக மூடிக் கொள்ளவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். குறிப்பாக பின்முதுகுத் தசைகள் (Low back muscles) ஓய்வுநிலையில் இருப்பது அவசியம். சுவாசத்தை உள்ளிழுத்து கொஞ்சம் கொஞ்சமாக தலை, கழுத்து மற்றும் தோள்பட்டையை தரையில் இருந்து உயர்த்தவும். கைகளை நன்கு ஊன்றி உடலை பின்நோக்கி வளைக்கவும். இப்படி செய்யும்போது பின்முதுகுத்தசைகளை பயன்படுத்தவும், கைகளை பயன்படுத்தக் கூடாது.

முதுகை நன்கு வளைத்த பின்னர், தலையை பின்நோக்கி சாய்த்து மேலே பார்க்கவும். உடல் பார்ப்பதற்கு ஒரு பாம்பு படம் எடுத்து நிற்பது போல் இருக்கும். எனவேதான் இதற்குப் பெயர் புஜங்காசனம். கடைசி நிலையில், அந்தரங்க எலும்பு (Pubic bone) தரையோடு படிந்து, தொப்புள் 3 செ.மீ. வரை மேலே இருத்தல் வேண்டும். இது இறுதி நிலை. 10 விநாடிகள் சுவாசத்தை நிறுத்தி மேற்கூறிய நிலையில் இருக்கவும். பின்பு சுவாசத்தை வெளியேற்றி படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரவும். உடலை முழுவதுமாக ரிலாக்ஸ் செய்யவும். இப்படி 3-5 முறை இப்பயிற்சியைச் செய்யலாம்.

பயன்கள்…

புஜங்காசனம் நமது வயிற்றுப்பகுதி முழுவதையும் தூண்டுகிறது. இதனால் நமது ஜீரண மண்டலம் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கலை நீக்க ஒரு சிறந்த ஆசனம். மலச்சிக்கலே பருமன் உள்பட பல நோய்களுக்கு மூல காரணம் என்பது யோகாவின் நம்பிக்கை. மலச்சிக்கலை தீர்ப்பதன் மூலம் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. யோக மருத்துவத்தில் இந்த ஆசனம் Slipped disc என சொல்லப்படும் முதுகெலும்பு பிரச்னைக்கு ஒரு தீர்வாக உபயோகப்படுத்தப்படுகிறது.பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை சீராக இயங்கச் செய்வதன் மூலம் மாதவிடாய் பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரசவ கால கால் வீக்கம்!!(மருத்துவம்)
Next post தோண்ட தோண்ட ஆடிப்போன தொல்லியல் ஆய்வாளர்கள்!! (வீடியோ)