கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)
* தோல் திக்கான எலுமிச்சைப் பழமாக இருந்தால் பழரசம் சரியாக வராது. அதற்கு 5 நொடி மைக்ரோ அவனில் வைத்து கசக்கி பிறகு நறுக்கி பிழிந்தால் நல்ல சாறுடன் இறங்கும்.
* தேங்காய் துவையல் செய்யும்பொழுது சீவிய மாங்காய் துண்டுகளை சேர்த்து அரைத்தால் நல்ல ருசி தரும்.
– என்.உமாமகேஸ்வரி, நங்கநல்லூர்.
*மஞ்சள் முள்ளங்கியை வேகவைக்கும்போது 1 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து வேகவைத்தால் வாசனையாக இருக்கும்.
– நா.செண்பகா, பாளையங்கோட்டை.
* காலிஃப்ளவர் கூட்டு செய்யும் பொழுது பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, வெங்காயத்தை தாளித்துக் கொட்டி சிறிது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, இன்ஸ்டன்ட் எலுமிச்சம் பொடி சேர்த்து செய்தால் சுவை வித்தியாசமானதாக இருக்கும்.
* ஊறுகாய் போடும் முன் உப்பை வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்துக் கொண்டு பிறகு அதில் ஊறுகாய்க்கான காய்களை போடலாம். இப்படி செய்தால் ஊறுகாய் சீக்கிரம் கெடாமலும், நன்றாக ஊறியும் இருக்கும்.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
* புதினா சாற்றுடன் கொஞ்சம் மிளகுத் தூளும், வேண்டிய அளவு தேனும் கலந்து கலக்கிக் குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.
– தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.
* கடலைப்பருப்பு, பச்சரியை சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து அதனுடன் சிறிது உப்பு, தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலத்தூள் கலந்து இட்லித்தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் ‘இட்லி டிலைட்’ தயார்.
* சிறிய ஜவ்வரிசி, அரிசி ரவை, தயிர், தேங்காய்த்துருவல், கொத்தமல்லி, மிளகாய் விழுது, உப்பு சேர்த்து கலந்து 5 மணி நேரம் ஊறவிடவும். நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து மாவில் சேர்த்து இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்க ‘முத்து இட்லி’ தயார்.
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
* தேங்காய் எண்ணெயில் வெந்தயம் போட நெய் போல உறையாது.
* கல் உப்பில் காம்புடன் பச்சைமிளகாயை போட உப்பில் நீர் வராது.
* காம்புக் கிள்ளிய பச்சைமிளகாய், மஞ்சள் பொடி தூவி கண்ணாடி பாட்டிலில் போட வாடாது, பழுக்காது.
– சு.கெளரிபாய், பொன்னேரி.
* சப்பாத்தி செய்து பாத்திரத்தினுள் வைத்து மூடி கொஞ்ச நேரம் கழித்து எடுக்கும் போது சிறிது விறைப்பாக இருக்கும். இதைத் தடுக்க சிறு சிறு இஞ்சித் துண்டுகள் நான்கு போட்டு வைத்தால் எப்போது எடுத்தாலும் மிருதுவாக இருக்கும்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
* அகத்தி இலையை நீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டு வந்தால் நாக்கு புண் ஆறும்.
– சண்முகத்தாய் செல்லையா, சாத்தூர்.
*ரசம் தயாரிக்கும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.
– ஆர்.அம்மணி ரெங்கசாமி, தேனி.
* முட்டைக்கோஸ் சாற்றுடன் கேரட் சாறு கலந்து குடித்தால் கண் பார்வை கூர்மை பெறும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating