ரிக்கெட்ஸ் ரிஸ்க்…!!(மருத்துவம்)

Read Time:7 Minute, 36 Second

எலும்பே நலம்தானா?!

வளரும் நாடுகளில் குழந்தைகளைஅதிகம் பாதிக்கிற எலும்பு நோய்களில் முக்கியமானது ரிக்கெட்ஸ். அதி தீவிர வைட்டமின் டி குறைபாட்டினால் குழந்தைகளின் எலும்புகள் மென்மையாகிற பிரச்னை இது.
ஆயிரம் குழந்தைகளில்ஒன்று அல்லது இரண்டு பேராவது இந்தப் பிரச்னையால்பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் குழந்தையின் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது. இந்தக்குறைபாடு ஏற்பட்டால் குழந்தையின் பாதங்கள் உள் வளைந்து, முன் பாதம் உள்ளடங்கி தாழ்ந்தும் காணப்படும்.

அறிகுறிகள் என்ன?

* தாமதமான வளர்ச்சி

* முதுகெலும்பு, இடுப்புப்பகுதி மற்றும் கால்களில் வலி

* தசைகளில் பலவீனம்

* கை மற்றும் கால் மூட்டுகள் தடித்திருப்பது

* கைகளும் கால்களும் வளைந்திருப்பது

* நெஞ்செலும்பு முன்னோக்கித்துருத்திக் கொண்டிருப்பது

* முதுகில் கூன் விழுவது

* நடப்பதற்கு சிரமப்படுவதுரிக்கெட்ஸ் பிரச்னை, குழந்தைகளின்எலும்புகள் முடியும் இடத்தில் உள்ள வளர்ச்சித் தட்டுகளை மென்மையாக்கிவிடும்.
மேலும்குழந்தைகளின் உருவமே மாறிப்போகலாம். உதாரணத்துக்கு கால்களும்,மூட்டுகளும் வளைந்து போவது, மணிக்கட்டு மற்றும் கணுக்கால் பகுதிகள் தடித்துப்போவது, விலா எலும்புகள் துருத்திக்கொண்டு நிற்பது போன்றவை ஏற்படலாம்.யாருக்கெல்லாம் ரிஸ்க் அதிகம்
* பெற்றோரில் ஒருவருக்கு இந்தக் குறைபாடு இருந்தால் குழந்தைக்கு, இந்த நோய் வருவதற்கு 3 முதல் 4 சதவிகித வாய்ப்பு உண்டு.
* வைட்டமின் டி சத்து குறைபாடுள்ளதாய்க்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு.
* சூரிய வெளிச்சம் குறைவானபகுதிகளில் வசிக்கிற குழந்தைகளுக்கு.
* குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு.
* வைட்டமின் டி சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் சிலவகை மருந்துகள் மற்றும் சிகிச்சைகள். உதாரணத்துக்கு ஹெச்.ஐ.வி ற்றுக்கானமருந்துகள்
* பிறந்ததும் மருத்துவர் பரிந்துரைக்கும் வைட்டமின் டி சொட்டு மருந்துகள் தரப்படாத குழந்தைகள்.
* ஆண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சிகிச்சைகள் அளிக்கப்படாவிட்டால் என்னவாகும்?

குழந்தையின் வளர்ச்சி பெரிதும்பாதிக்கப்படும். முதுகெலும்பு அளவுக்கதிகமாகவளைந்திருக்கும். எலும்புக்கூட்டில் அசாதாரணநிலை, பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுதல், வலிப்பு நோய் அபாயம்.

தடுக்கும் முறைகள்

வெயில்தான் மிகச்சிறந்த மருந்து.தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் இளம் வெயிலில் இருக்க வேண்டும். வைட்டமின் டி அதிகமுள்ள முட்டை,மீன் எண்ணெய், மீன் மற்றும் செறிவூட்டப்பட்ட தானியங்கள், பிரெட், பால், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

வைட்டமின் டி என்ன செய்யும்?

வைட்டமின் டி உடலில் போதுமானஅளவு இருந்தால் அது புற்றுநோய், கணைய நோய், எலும்புருக்கி நோய், இதயம், ரத்த நாளங்கள்சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய், காசநோய், குளிர்காய்ச்சல், உடல் பருமன், முடிஉதிர்தல் மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களை வராமல் தடுக்கும்.வைட்டமின் டி நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்தி ஜலதோஷம், குளிர் காய்ச்சல் மற்றும் நிமோனியா காய்ச்சல் ஆகியவற்றைத்தடுக்கும். குழந்தைகள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறப்பதற்கு உதவும். குறைமாதப் பிரசவ ஆபத்துக்களைத்தடுக்கும்.

கருவில் உள்ள குழந்தைக்கு வலு சேர்க்கும். வைட்டமின் டியை சரியான அளவில்எடுத்துக் கொண்டால் கீழே தவறி விழுவது, எலும்புமுறிவுகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் டைப் 1 வகை சர்க்கரை நோய் போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்க முடியும். உடலில் உண்டாகும் புண்களைவிரைவில் குணமாக்கக் கூடிய சக்தி வைட்டமின் டிக்கு உள்ளது.

சிகிச்சைகள்.

பொதுவாக கால்சியம், வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பு வளைவு நோய் ஏற்படுகிறது என்பதால், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் சப்ளிமென்ட்டுகள் மூலமே சிகிச்சை கொடுக்கப்படுகின்றன. வேறு காரணங்கள் இருந்தால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் மாறுபடும். இதை இரண்டு வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று அறுவை சிகிச்சை, நிமிர்த்தமுடியாத கால்களில் அறுவை சிகிச்சை என்பது குழந்தைகளுக்கு சிரமத்தை உண்டாக்கலாம்.எனவே, மாவுக்கட்டு சிகிச்சை பரிந்துரைக்கப்படும். மாவுக்கட்டு சிகிச்சை முறைபல நாடுகளில், குழந்தைகளின் வளைந்த கால்களை நேராக்குவதில் வெற்றி கண்டுள்ளது.

இந்தமுறையில் வெற்றி பெறுவது என்பது பெற்றோரின் ஒத்துழைப்பு மற்றும் தொடர்ந்த கவனிப்புஆகியவற்றை பொறுத்தே அமையும்.இரண்டாவது வளைந்த கால்களுடன் குழந்தை பிறந்தது என்றால், குழந்தை பிறந்த நாள் அன்றே சிகிச்சையை தொடங்க ஆரம்பிக்கவும். வாரத்திற்கு ஒரு முறை மாவுக்கட்டு போடுவதன் மூலம் அதை குணப்படுத்தலாம்.

4 முதல் 10 வாரங்களுக்குமாவுக்கட்டு போடுவதன் மூலம் வளைந்த பாதத்தை அறுவை சிகிச்சையின்றி சரி செய்ய முடியும்.இந்த முறையில் பாதக்குறைபாடுசரிசெய்யப்பட்ட பின் அதற்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செருப்புகளை குறைந்தபட்சம்4 ஆண்டுகளுக்கு குழந்தைகள் அணிய வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “மீண்டும் ஆட்சிக்கு வர இன்னும் 30 ஆண்டுகள் ஆகும்” – பிரதமர்!!(உலக செய்தி)
Next post ஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்!!!(மகளிர் பக்கம்)