கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 49 Second

* பயத்தம் பருப்பு சுண்டல் குழைகிறதா? பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து விட்டு கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு மூடி வைத்தால் 15 நிமிடத்தில் பூவாக மலர்ந்து விடும். பிறகு தாளித்தால் குழையவே குழையாது. ஒன்றோடு ஒட்டாமல் ஜமாய்க்கும்.
* சுண்டல் தாளித்த கையோடு ரெடிமேட் புளியோதரைப் பொடியை தூவி இறக்கினால் சுண்டல் சூப்பராக இருக்கும்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* சிறிது பொரிகடலை, புழுங்கல் அரிசி இரண்டையும் வறுத்துப் பொடித்து சாம்பார் பொடியுடன் சேர்த்தால் சாம்பார் சூப்பராக இருக்கும்.
* சாம்பாரில் காய்களுடன் ஒரு பெரிய நெல்லிக்காயையும் கட் பண்ணிப் போட்டு சமைத்துப் பாருங்கள். கல்யாண சாம்பாரையும் மிஞ்சி விடும் சுவை. சத்தானதும் கூட.
* சாறு பிழிந்த எலுமிச்சைப் பழத்தோலைத் தூக்கி எறிந்து விடாமல், உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அதோடு சேர்த்து வேக வையுங்கள். உருளைக்கிழங்கு பொரியல் கமகமவென்று மணம் வீசும்.
– கவிதா சரவணன், திருச்சி.

* கீரைகளை மூடி போட்டு வேகவிடக் கூடாது. வெண்ணெய் அல்லது சர்க்கரை சேர்த்தால் பச்சை நிறம் மாறாது.
* சூடான சமையல்களில் எலுமிச்சைச்சாறு பிழியக் கூடாது. சற்று ஆறியவுடன் பிழியவும்.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகம் கொதிக்கக் கூடாது.
– மாலதி நாராயணன், சென்னை-87.

* எந்தவித ஊறுகாய் தயாரித்தாலும் கடுகு போடுவதற்கு பதில் சிறிதளவு சோம்பை தாளித்து சேர்த்தால் ஊறுகாய் சுவையாக இருக்கும்.
* இட்லி செய்ய அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் இட்லி பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.
* தயிர் வடை செய்யும்போது வடையை பொரித்து சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.
– அ.சித்ரா, காஞ்சிபுரம்.

* புதினா அதிகம் கிடைக்கும் நேரத்தில் சுத்தம் செய்து காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையான பொழுது கொதிக்கும் டீயில் 1/2 டீஸ்பூன் இந்தப் பொடியை சேர்த்து பின்பு பால் சேர்த்து வடித்தால் சுவையான மின்ட் டீ கிடைக்கும். அதே போல் 1 டம்ளர் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் சேர்த்து வாய் கொப்புளித்தால் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
* தேங்காய் சாதம் செய்யும்போது கொஞ்சம் பாதாம், முந்திரியை வெறும் கடாயில் வறுத்து கரகரப்பாக பொடித்து சேர்த்து, 1/2 டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து கிளறினால் வாசனையும், சுவையும் கூடுதலாக கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரும்… ஆனா வராது….இன்னும் முடியாத எய்ம்ஸ் குழப்பம்!!(மருத்துவம்)
Next post ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா?(அவ்வப்போது கிளாமர்)