உதவும் உபகரணங்கள்…!(மருத்துவம்)
நிற்பது, நடப்பது, கை கால்கள் இயங்குவது, தம்முடைய பணிகளை தாமே செய்து கொள்வது போன்றதுதான் இயல்பான வாழ்க்கைமுறை. ஆனால், வயது மூப்பின் காரணமாகவோ, எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியோ அல்லது பிறவியிலேயோ நாம் நடமாடுவது தடைபட்டால் என்ன செய்வது? ‘‘கவலைப்பட வேண்டாம் என்கிறது இவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் இருக்கின்றன’’ என்கிற பொதுநல மருத்துவர் ஷிவானி, உபகரணங்களின் உபயோகம் பற்றி விளக்குகிறார்.
‘‘இன்னொருவரைச் சார்ந்து இருக்க கூடாது என்றுதான் எல்லோரும் விரும்புவர். ஆனால், தவிர்க்க முடியாத சூழலில் நம் நடமாட்டம் பாதிக்கப்பட்டால் அவர்களை இயல்பான நடமாட்டத்துக்குக் கொண்டு வர உதவுவதுதான் இந்த உபகரணங்களின் வேலை. விபத்துக்குள்ளாகி குறிப்பிட்ட காலம் வரை அவர்களால் நடமாட்டம் இல்லாமல் இருப்பது, தீவிரமான விபத்து காரணமாக வாழ்நாள் முழுக்கவே நடமாட முடியாமல் போவது, பிறவியிலேயே ஊனமுற்றவராக இருப்பது மற்றும் வயது மூப்பின் காரணமாக பொதுவான நடமாட்டம் இல்லாதது என பிரிக்கலாம். இதில் பிறவியிலேயே ஊனமுற்றவராக இருப்பவர்கள் அவர்கள் ஒரு பழகிய வாழ்க்கை முறையில் இருப்பார்கள்.
அவர்களுக்கு உபகரணங்களைப் பயன்படுத்துவது இயல்பாக இருக்கும். ஆனால், நன்றாக நடமாடிய ஒருவர் எதிர்பாராத விபத்துக்குள்ளாகி நடக்க முடியாமல் போனால் அவர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார். அவர்களை இயல்பாக நடமாட வைப்பதற்கு இந்த உபகரணங்கள் இன்றியமையானதாக இருக்கிறது. இது எலும்பு முறிவு மருத்துவர் ஆலோசனைப்படியும் அவர் பரிந்துரையின் படியும் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திக்கொள்கிறார்.
அதுபோல பாதிப்படைந்தவரின் நிலையை வைத்து அவருக்கான உபகரணத் தேவையைப் பொறுத்து தயாரித்து தரப்படுகிறது. விபத்தின் காரணமாக படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு அன்றாட இயற்கை உபாதைகளை கழிக்க உதவுவதுதான் உபரகணங்களின் முதல் தேவை. பிறகு, அவர்கள் வெளி உலகத்தில் நடமாடுவதற்குத் தகுந்தாற் போலவும் உபகரணங்கள் தயாரிக்கப்படுகிறது. முதியவர்களைப் பொறுத்தளவில் வயது மூப்பின் காரணமாக அவர்கள் நடமாட்டத்தில் தொய்வு ஏற்படும். அவர்கள் அன்றாட இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும், நடப்பதற்கும் சிரமப்படுவார்கள்.
இதனால் இவர்களுக்காக பொதுவான உபகரணங்கள் பயன்படுத்துவது அவர்களை இயல்பான நடமாட்டத்திற்கு உதவும். முதியவர் நல மருத்துவர் ஆலோசனையின்படி இவர்களுக்கான உபகரணங்கள் தரப்படுகிறது’’ என்கிறார். மேலும் இவ்வாறான உபகரணங்களை பாதிப்புக்குள்ளானவர்களின் பயன்படுத்தும் வகையில் இவர்களுக்கு உதவும் வண்ணம் உபகரணங்களை வாங்கி விற்பனை செய்யும் ஜெயலட்சுமியை சந்தித்து பேசினோம்… ‘‘பொதுவாக பாதிப்படைந்தவர் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பாதிப்படைந்தவரின் தேவையை பொறுத்து அதற்காக சிறப்பாக
தயாரிக்கப்பட்டும், வாங்கியும் தருகிறோம். இது மருத்துவர் ஆலோசனைப்படியே வழங்குகிறோம்.
முதியவர்களுக்காக Commode நாற்காலிகள், மூடி கொண்ட கழிப்பறை ரைசர், கழிப்பறை இருக்கை, க்ராப் பார்கள், ஸ்விங் அப் க்ராப் பார்கள், எதிர்ப்பு ஸ்கிட் பாய்களை, SOS பட்டன் சிறப்பு தொலைபேசி, அலர்ட் அலாரம், சென்சார் விளக்குகள், முழங்கால் காப், முழங்கால்கள் – முதுகெலும்பு ஸ்பேசர், ஜெல் ஹீல் பேட், ஜெல் ஹீல் சப்போர்ட், நீரிழிவு சாக்ஸ் மற்றும் காலணிகள், வீக்லி – டெய்லி பேஸ் டேப்லெட் ஸ்டோர் பெட்டி, பல்வேறு வகையான நடை பயிற்சி குச்சிகள் போன்றவை இருக்கின்றன. இவை முதியவர்களின் பொதுவான பாதிப்புகளுக்காகவும் அவர்கள் இன்னொருவரை சார்ந்து இல்லாமல் தாங்களாகவே தங்களுடைய பணிகளை செய்து கொள்வதற்காக தயாரிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளாகி படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்காக கீழ் பட்டைகள் & இணைத்திறன் பட்டைகள், வளைந்த ஸ்பூன் & வளைந்த ஃபோர்க், உணவு தட்டு பம்பர், ஷாம்பு பேஸின் முடி கழுவி, படுக்கை பாத் துண்டுகள், படுக்கை பேன்கள், கர்ப்பப்பை வாய் நுரைத்தாள், குவியல் குஷன், டெய்ல் எலும்பு சப்போர்ட், அனுசரிப்பு மீண்டும் ஓய்வு, படுக்கை மற்றும் நீர் படுக்கை, ஏர் படுக்கை, அறுவை சிகிச்சை லும்போ சாக்ரல் கோர்செட், ஈஸ்ட் ப்ரீத் வேப்பெரியேர், B-Fit pull ups.
மடிப்பு படுக்கை தட்டு போன்ற உபகரணங்கள் மருத்துவரின் ஆலோசனை படி அவருக்கு தேவையான உபகரணங்கள் சிறப்பாக தயாரிக்கப்பட்டும் தரப்படுகிறது. உடல் ஊனமுற்றோருக்காக தொலைநோக்கி கேன், வெவ்வேறு வகையான வாக்கர்ஸ், சக்கர நாற்காலி பெல்ட், கமோட் சையர், சக்கர நாற்காலிகள், லெக் லிஃப்ட் பெல்ட், பக்கவாட்டு உடல் ஆதரவு, சிட்ஸ் பாத், இடுப்பு ஒழுங்கமைவு இவையனைத்தும் உடல் ஊனமுற்றோரின் இயக்கத்திற்கு உதவுகிறது’’ என்கிறார்.
Average Rating